பேச்சு:விருத்த சேதனம்

விருத்த சேதனம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

அராபத்! வணக்கம். இது ஒரு சிறப்பான பக்கம். Circumcision- இல் இவ்வளவு விசயங்களா! ஒரேயொரு ஐயம். எளிமையான சொற்களான சுன்னத்து, சுற்றிவெட்டல் [1] ஆகியவற்றையும் தலைப்புகளாகக் கொடுத்து இப்பக்கத்திற்குத் திருப்பி விடலாம் (Redirect) அல்லவா? மற்றபடி உங்கள் பங்களிப்புகளை தொடர்ந்து அளித்து வாருங்கள். நன்றி. --பரிதிமதி 17:51, 4 மார்ச் 2010 (UTC)

நன்றி பரிதிமதி. சுன்னத்து என்பது தமிழ் வார்த்தை அல்ல. அரபுச் சொல். நபிவழி என்பது அதன் அர்த்தம். இது இசுலாமியர்களிடம் மட்டும் உள்ள சொல்வழக்கு. மற்றபடி விருத்த சேதனம் என்பது தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட குரான், விவிலியம், அதியாகமம் என அனைத்து மத புனித நூழ்களிலும் பயன்படுத்தப்படும் வார்த்தையே. எனவேதான் இதை தலைப்பாக வைத்தேன்.--Arafat 18:22, 4 மார்ச் 2010 (UTC)
மிக அருமையான நெடிய கட்டுரை, அராவ'த்! வாழ்த்துகள். நன்றாக உழைத்து ஆக்கியுள்ளீர்கள்!--செல்வா 18:32, 4 மார்ச் 2010 (UTC)

நன்றி செல்வா. Wet Dreams என்பதை தமிழில் எவ்வாறு அழைப்பது? சில இடங்களில் சொப்ன ஸ்லிகதம் என்ற வார்த்தை பயன்படுத்தப் படுகிண்றது.--Arafat 05:29, 5 மார்ச் 2010 (UTC)

நல்ல கட்டுரை. பாராட்டுக்கள். சொப்பன ஸ்கலிதம் என்பது (சொப்பனம்=தூக்கம் கனவு) தூக்கத்தில் வெளியாகும் விந்து பற்றியது. நீங்கள் தமிழகத்தில் இருப்பீர்களானால், ஆண்மைக் கோளாறு, சொப்பன ஸ்கலிதம், இதுபோன்ற வார்த்தைகளைக் கொண்ட தமிழ் விளம்பரங்களை அதிகம் கண்டிருப்பீர்கள். -- மாஹிர் 17:13, 4 மே 2010 (UTC)Reply
சொப்பனம் என்றால் கனவு என்று நினைக்கிறேன். கரகாட்டக்காரனில் வரும் சொப்பனசுந்தரி நகைச்சுவை தெரியுமல்லவா? சொப்ன ஸ்லிகதம் - தூக்க விந்து வெளியேற்றம் எனலாமா? --குறும்பன் 17:18, 4 மே 2010 (UTC):Reply
நான் இப்பொழுதுதான் இக்கேள்வியைப் பார்க்கின்றேன், அராவ'த். காலத்தாழ்வுக்கு வருந்துகிறேன். தூக்க விந்துநீக்கம் எனலாம். உறக்க/உறக்கத்தில் விந்துநீக்கம், துயில்/துயிலில் விந்துநீக்கம் எனலாம்.இடக்கரடக்கலாக வேண்டுமெனில் துயில் வெளுப்பு, உறக்க/தூக்க வெளுப்பு எனலாம். வெளுப்பு என்பதை வெளிப்பு என்றும் மாற்றிச் சொல்லலாம்--செல்வா 18:36, 4 மே 2010 (UTC)Reply
நன்றி மாஹிர்,குறும்பன், செல்வா. Wet dreams என்பதை கனவு ஒழுக்கு என பரிதிமதி ஏற்கனவே மாற்றி விட்டார். துயில் வெளுப்பு என்பதும் நன்றாக இருக்கின்றது. எங்கள் ஊர் பக்கம் இதை மேகம் படுதல் அல்லது வெள்ளைப் படுதல் என்று அழைகின்றனர். எது சரியோ அதை மாற்றிவிடுங்கள் --அராபத்* عرفات 03:32, 5 மே 2010 (UTC)Reply
பரிதிமதியின் கனவு ஒழுக்கு என்பதே சரியானதாகப்படுகிறது.உறக்கத்தில் பாலினக் கனவுகள் கண்டு அதனால் உணர்ச்சிவயப்படுதலை முன்னிட்டு எழுவதாக பொருள் தருகிறது. ஆங்கிலச் சொல்லாக்கத்திற்கும் சரியான தமிழாக்கமாக உள்ளது. மற்றொரு சொல்லாக கனவுக் கசிவு என்றும் கூறலாம். வெள்ளைப் படுதல் என்பது பெண்களின் மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில் வெள்ளைநீர் வெளியேறுவதைக் குறிக்கும்.--மணியன் 04:08, 5 மே 2010 (UTC)Reply


முன்தோல் அகற்றம் என்று எளிமையான தமிழ் இருக்கும் போது இது என்ன பழங்கால தலைப்பு. கலைக்களஞ்சியம் எளிமையாக இருந்தால்தான் மக்களிடம் சென்று சேரும் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன்.

அடுத்து கிறித்து பண்பாட்டிலும் இம்முறை உள்ளமையால் அதற்கும் பகுப்பு இணைப்பு தர முயலுங்கள் நன்றி.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விருத்த_சேதனம்&oldid=825386" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "விருத்த சேதனம்" page.