பேச்சு:விலங்குகளுடனான பாலுறவு

விக்கித் திட்டம் விலங்குரிமை
WikiProject iconவிலங்குகளுடனான பாலுறவு என்னும் கட்டுரை விலங்குரிமை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் விலங்குரிமை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
 

கஜுராஹோ படம்

தொகு

கட்டுரையிற் காணப்படும் படத்தில் குதிரையுடன் மாந்தர் உடலுறவு கொள்ளும் காட்சி கஜுராஹோவிலுள்ள இந்துக் கோயிலில் உள்ள சிற்பமன்றோ. அப்படியானால், இந்து மதத்தில் அதற்குத் தடையிருப்பதாகக் கூற முடியாது. கட்டுரையில் உள்ளபடி, //இந்து, கிறித்துவ மக்களின் திருமணச் சட்டத்தில் தகாத உறவுகளோடு விலங்குகளோடு வைத்துக் கொள்ளும் புணர்ச்சியும் குறிப்பிடப்பட்டுள்ளது.// இக்கூற்று இந்துக் கோயிலிற் காணப்படும் சிற்பத்தினாற் கருதப்படும் சட்டத்துக்கு முரணல்லவா? மேற்படி சட்டம் எந்த நாட்டில் உள்ளது?--பாஹிம் (பேச்சு) 04:52, 6 மே 2012 (UTC)Reply

கோயில் சிற்பத்தில் இந்த உறவு உள்ளதால் இந்து சட்டத்தில் இதற்கு ஏற்பு உள்ளது என்று பொருள் இல்லை. சட்டத்தில் ஏற்பு இல்லாத இன்னும் பல வகை உறவுகளும் கூட கோயில் சிற்பங்களில் காணப்படும். முறையாக சட்டம் அறிந்தவர்கள் தான் இதற்குத் தகுந்த ஆதாரம் தர வேண்டும்--இரவி (பேச்சு) 09:18, 6 மே 2012 (UTC)Reply
Return to "விலங்குகளுடனான பாலுறவு" page.