பேச்சு:வேட்டி

வேட்டி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தினம் தொகு

  • "வேட்டி தினம்" என்று அதிகாரபூர்வமாக யாரால் அறிவிக்கப்பட்டது என்பதற்கான குறிப்பு கட்டுரையில் இல்லை:

கோஆப் டெக்சின் விற்பனையை அதிகரிக்கும் யுக்தியாக கலெக்டர் சகாயம், ஜனவரி முதல் இருவாரங்களில் (அதாவது பொங்கலுக்கு முன்) ஏதாவது ஒருநாள் அரசு அலுவலகங்களில் வேட்டி தினமாகக் கொண்டாடும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார்([1]). ஆனால் குறிப்பிட்ட ஒரு தேதியைக் குறிப்பிடவில்லை.

  • ஜனவரி 6 ஐ சர்வதேச வேட்டி தினமாக யுனஸ்கோ அறித்துள்ளதாக தினகரன் செய்தித்தாளின் ஒரு குறிப்பு தருகிறது [2]. இது சரியான தகவலா?

கட்டுரை தரும் விவரங்களுக்கு அதிகாரபூர்வமான ஆதாரங்கள் இணைக்கப்படல் வேண்டும். (தேடியவரை எனக்கு எதுவும் கிட்டவில்லை). --Booradleyp1 (பேச்சு) 05:44, 10 சனவரி 2015 (UTC)Reply

யுனசுக்கோ இப்படி அறிவித்ததாக தமிழ் இதழ்கள் தான் குறிப்பிடுகின்றன. யுனசுக்கோவின் அலுவல் தளத்திலோ வேறு ஆங்கில இதழ்களிலோ இத்தகவலைக் காணவில்லை. --இரவி (பேச்சு) 07:32, 10 சனவரி 2015 (UTC)Reply

யுனெஸ்கோ அறிவித்தால் அதற்கான ஆதாரம் வேண்டும். ஆரம்ப வரிகள் தவிர்ந்த பகுதிகள் தமிழ் நாடு சார்ந்ததாகவே உள்ளன. --AntonTalk 12:51, 10 சனவரி 2015 (UTC)Reply

யுனெஸ்கோ அறிவிப்பு குறித்து எனக்கும் ஐயமாகவே உள்ளது. அந்த பகுதியை மட்டும் நீக்கிவிடலாம் (பேச்சு)Arulghsr (பேச்சு) 13:41, 10 சனவரி 2015 (UTC)Reply

இக்கட்டுரையினை "வேட்டி" கட்டுரையுடன் "தமிழ் நாட்டில் ஊக்குவிப்பு" என்ற தலைப்பின் கீழ் இணைக்கலாம். --AntonTalk 14:09, 10 சனவரி 2015 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வேட்டி&oldid=3781473" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வேட்டி" page.