பேச்சு:ஹிரகனா எழுத்துக்கள்

Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic உதவி

உதவி தொகு

இந்த கட்டுரையின் தலைப்பை எவ்வாறு மாற்றுவது இது 'ஹிரகனா' என்று இருக்க வேண்டும் 'இறகனா' என்று உள்ளது Vinodh.vinodh 10:10, 16 நவம்பர் 2007 (UTC)Reply

Hiragana என்பதைத் தமிழில் எழுதும் போது இறகனா என எழுதுவது பொருத்தமானது. கோபி 08:52, 17 நவம்பர் 2007 (UTC)Reply

ஆம் இறகனா அல்லது இரகனா என்று இருப்பதே தமிழில் சரியாக இருக்கும். Hanuman என்பதை அனுமான் என்று எழுதுவதில்லையா, அதுபோலவே இதுவும். Hari, Haran என்னும் சொற்களை அரி, அரன் என்று கூறுவதில்லையா? இதில் தவறேதும் இல்லை. தமிழில் எழுதும்பொழுது தமிழ்மொழி வழி வழக்கை ஒட்டியே எழுதுதல் நலம்.--செல்வா 13:32, 17 நவம்பர் 2007 (UTC)Reply

பிறமொழி சொற்களை குறிக்கையில் கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துவதில் தவறில்லை. எனவே 'ஹிரகனா' என்பதே பொருத்தமாக இருக்கும் வினோத் 13:59, 17 நவம்பர் 2007 (UTC)Reply

கிரந்த எழுத்துக்களை முடிந்தவரை தவிர்ப்பதே பொருத்தமானது. கோபி 14:01, 17 நவம்பர் 2007 (UTC)Reply

Vinodh, அனுமான், அரி, அரன் ஆகிய சொற்களை நீங்கள் கேட்டதில்லையா? அதுபோலத்தானே இரகனா அல்லது இறகனா? எல்லா மொழிகளுக்கும், பிறமொழிச்சொற்களைக் குறிப்பிடும் தேவை உள்ளது. அதனால் எல்லாமொழியினரும் தங்கள் மொழியின் அகரவரிசையையே மாற்றிக்கொள்கிறார்களா? இல்லையே? மகாயானம், இறகனா (அல்லது இரகனா) என்று எழுதுவதில் தவறில்லை. இப்படி உங்களைப்போல சிலர் கூறுவதற்காகவே முன்னொருமுறை ஃஅனுமான், ஃஅரி, ஃஅரன் ஃஇட்லர் என்றெல்லாம் எழுதலாம் என்றும் எழுதியுள்ளேன். எனவே ஃஇரகனா என்றும் எழுதலாம். ஆனால் தேவை இல்லை. இரகனா என்றோ இறகனா என்றோ எழுதலாம். மஞ்சுசிறீ என்பதை பிற மொழிகளில் எப்படி எழுதுகிறார்கள் என்று பாருங்கள்: Mañjuśrī Ch: 文殊 Wénshū or 文殊師利菩薩 Wénshūshili Púsà; Jp: Monju; Tib: Jampelyang; New: मंजुश्री Manjushree. எனவே தமிழில் மஞ்சுசிறீ அல்லது மஞ்சுசிரீ என்று எழுதுவதால் ஏதும் தவறில்லை. மகாயான பௌத்தம் என்பதை எப்படி பிற மொழிகளில் எழுதுகிறார்கள் என்று பாருங்கள்: சீனம்: 大乘, Dàshèng; ஜப்பானியம்: 大乗, Daijō; கொரிய மொழி: 대승, Dae-seung; வியட்னாமிய மொழி: Đại Thừa; திபெத்திய மொழி: theg-pa chen-po; மங்கோலிய மொழி: yeke kölgen). தமிழில் மகாயான பௌத்தம் என்று எழுதினால் தவறென்ன. தமிழ்மொழியின் வழி எழுதுவதுதானே முறைமை? மஃகாயானம், மஃஆயானம் என்றும் எழுதலாம், ஆனால் தேவை இல்லை. --செல்வா 15:32, 17 நவம்பர் 2007 (UTC)Reply

Return to "ஹிரகனா எழுத்துக்கள்" page.