பேச்சு:2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
பூமிப்பந்தின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக்கின் இந்த 2012 நிகழ்வினை விரிவான அளவில் தமிழில் பதித்திட எண்ணம். '2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் முக்கிய முடிவுகள்' எனும் தலைப்பில் புதிய கட்டுரை ஒன்றினை ஆரம்பிக்கலாமா? குறிப்பிடத்தக்க முடிவுகளை இங்கு பட்டியலிடலாம். உதாரணமாக, உலக சாதனைகளை குறிப்பிட்டு எழுதலாம்; ஒவ்வொரு பிரிவிலும் அதிக பதக்கங்கள் பெற்ற அணி (நாடு), ஆண் வீரர், பெண் வீரர்... என்பன போன்ற தகவல்களின் தொகுப்பினை இங்கு இடலாம். மொத்தத்தில் புள்ளிவிவரத் தொகுப்பு! ஏற்கனவே உருவாகியுள்ள முக்கிய கட்டுரையிலிருந்து 'இதையும் காண்க' என இணைப்பு தரலாம். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:29, 28 சூலை 2012 (UTC)
- நன்றி செல்வசிவகுருநாதன். எதற்கும் விளையாட்டுப் போட்டிகள் குறித்த ஆங்கில விக்கிக்கட்டுரைகளைப் பின்பற்றுவது நல்லது. அவற்றையும் பாருங்கள்.--Kanags \உரையாடுக 04:28, 28 சூலை 2012 (UTC)
- வணக்கம் கனக்ஸ்! தங்களின் சிறந்த ஆலோசனையின்படி ஆங்கில விக்கியிலும் நோட்டமிட்டேன். அங்கு பல கட்டுரைகளை தனித்தனியாக உருவாக்கி இருக்கிறார்கள். 2012 Summer Olympics opening ceremony, 2012 Summer Olympics medal table, Chronological summary of the 2012 Summer Olympics, 2012 Summer Olympics closing ceremony என்பன சில உதாரணங்கள். நாம் அவ்வளவு கட்டுரைகளை உருவாக்கி தொகுப்பது கடினம். எனவே, நினைத்துள்ள கட்டுரையையாவது உருவாக்கி தொகுக்க முடிவு செய்துள்ளேன்.
- விளையாட்டில் ஆர்வமுள்ள அனைத்து பயனர்களும் தங்களால் முடிந்த அளவு உதவலாம்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:18, 28 சூலை 2012 (UTC)
இற்றை தேவை
தொகுபோட்டி முடிவுற்றதை அடுத்து கட்டுரையின் உள்ளடக்கம் வெகுவாக இற்றைப்படுத்தப்பட வேண்டியுள்ளது. பதக்க நிலவரம், இப்போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள், செய்தித் தொகுப்பு ஆகியவற்றை உள்ளடக்க வேண்டும். அதற்கு ஏற்ப கட்டுரையின் முதல் சில வரிகளையும் விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகத்து 12, 2012 பக்கத்தில் உள்ள சுருக்கத்தையும் மாற்ற வேண்டும்--இரவி (பேச்சு) 04:20, 13 ஆகத்து 2012 (UTC) ஆயிற்று--மணியன் (பேச்சு) 06:24, 14 ஆகத்து 2012 (UTC)