பைக்கோ ஐயர்

சித்தார்த் பைக்கோ ராகவன் ஐயர் (Siddharth Pico Raghavan Iyer) பிறப்பு: பெப்ரவரி 11, 1957 பைக்கோ ஐயர் என அறியப்படுகிறார். இவர் அமெரிக்க புதின எழுத்தாளர், கட்டுரையாளர் ஆவார். இவர் பண்பாடு பற்றிய எண்னற்ற நூல்களை (எழுத்துப் படைப்பு) படைத்துள்ளார். குறிப்பாக காட்மாண்டுவின் நிகழ்பட இரவு, துறவியும் பெண்ணும், பூரண ஆன்மா போன்றவைகள் ஆகும். டைம் இதழில் 1986 ஆம் ஆண்டிலிருந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். மேலும் த நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பல பதிப்பகங்களில் தன்னுடைய படைப்புக்களை வெளியிட்டுள்ளார்.

பைக்கோ ஐயர்
2012 இல் பைக்கோ ஐயர்
2012 இல் பைக்கோ ஐயர்
பிறப்புசித்தார்த் பைக்கோ ராகவன் ஐயர்[1]
11 பெப்ரவரி 1957 (1957-02-11) (அகவை 67)[2]
ஆக்சுபோர்டு , இங்கிலாந்து
தொழில்புதின எழுத்தாளர், கட்டுரையாளர்
வகைபுனைவு
இணையதளம்
PicoIyerJourneys.com

ஆரம்பகால வாழ்க்கை தொகு

பைக்கோ ஐயரின் இயற்பெயர் சித்தார்த் பைக்கோ ராகவன் ஐயர் ஆகும். இவர் ஆக்சுபோர்டு, இங்கிலாந்தில் பெப்ரவரி 11, 1957 இல் பிறந்தார்.இவருடைய பெற்றோர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் . இவருடைய தந்தை ராகவன் என். ஐயர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் மெய்யியலாளர் மற்றும் அரசியல் தத்துவவாதி ஆவார்[1][3]. தாய் சமய அறிஞர் நந்தினி நானக் மேத்தா ஆவார்[1]. இவர் குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த மஹிபத்ரம் நில்காந் எனும் எழுத்தாளரரின் பேரன் ஆவார்.[4][5] இவரின் பெற்றோர்கள் இருவரும் பிறந்து வளர்ந்தது இந்தியாவில், பிறகு கல்வி பயில்வதற்காக இங்கிலாந்து சென்றனர்.[6]

1964 இல் பைக்கோவிற்கு ஏழு வயதாக இருக்கும் போது இவரின் தந்தை, கலிபோர்னியாவில் உள்ள மக்களாட்சி நிறுவனங்களின் கல்விக்குழுமத்தில் பணிபுரிந்துவந்தார். அதனால் தனது குடும்பத்துடன் கலிபோர்னியா சென்றார். சான்டா பார்பரா கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் பைக்கோவின் தந்தை 1965 முதல் 1986 வரைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.[6][7][8]

இலக்கியத்தில் தனது இரண்டாவது முதுகலைப்பட்டத்தினை ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். 2017 ஆம் ஆண்டில் மாரியோ பார்க்காசு யோசா மற்றும் பிளாசிடோ டோமிங்கோ ஆகியோருடன் இணைந்து சாப்மன் பல்கலைக்கழகத்தின் கௌரவ மருத்துவப் பட்டம் பெற்றார்.

தொழில் வாழ்க்கை தொகு

1982 ஆம் ஆண்டில் டைம் (இதழ்) இல் பணியில் சேர்ந்தார். அதற்கு முன்பாக ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் எழுத்து மற்றும் இலக்கியத் துறையின் பேராசிரியராகப் பணி புரிந்தார். பல நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டார். வட கொரியா முதல் ஈஸ்டர் தீவு வரையும், மேலும் பரகுவை முதல் எத்தியோப்பியா வரை பயணம் புரிந்தார். அந்தப் பயணங்களின் போது இரண்டு புதினம் (இலக்கியம்), புனைகதைகள் உட்பட எட்டு படைப்புகளை எழுதினார். குறிப்பாக 1988 ஆம் ஆண்டில் எழுதிய காட்மாண்டுவின் நிகழ்பட இரவு, 1991 இல் எழுதிய துறவியும் பெண்ணும், 2000 இல் பூரண ஆன்மா போன்றவைகள் அடங்கும். இதுமட்டுமல்லாது உலகம் முழுவதிலும் உள்ள பல பல்கலைக்கழகங்கள் மற்றும் இலக்கிய விழாக்களில் சொற்பொழிவாற்றினார். 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் டெட் (மாநாடுகளில்) உரை நிகழ்த்தினார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

பைக்கோ ஐயர் 1992 ஆம் ஆண்டு முதல் நரா, யப்பானில் வசித்தார்[9]. அங்கு தனது யப்பானிய மனைவி ஹிரோகோ டகுச்சியுடன் வாழ்ந்து வந்தார்.[2]

நூல்கள் தொகு

தெ ரெகவரி ஆஃப் இன்னசன்ஸ். (இலண்டன்: கான்கார்ட் க்ரோவ் பதிப்பகம், ஜூலை 1984. ISBN 0-88695-019-8) - அமெரிக்கக் காங்கிரசு நூலகத்திடம் இந்த நூலின் நகல் உள்ளது.

1988 ஆம் ஆண்டில் எழுதிய காட்மாண்டுவின் நிகழ்பட இரவு, சூலை, 1989 (ISBN 0-679-72216-5)

1991 இல் எழுதிய துறவியும் பெண்னும், (ஆகஸ்டு 1991 / ISBN 0-679-40308-6;)

2000 இல் பூரண ஆன்மா போன்றவைகள் அடங்கும்

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Raghavan Iyer, Political Science: Santa Barbara, 1930-1995", Calisphere, University of California.
  2. 2.0 2.1 Mark Medley (13 பெப்பிரவரி 2012). "Being Greene: Pico Iyer evokes his 'literary father' in The Man Within My Head". National Post. Archived from the original on 3 திசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 27 செப்டெம்பர் 2013.
  3. Rukun Advani, "Mahatma for Sale" பரணிடப்பட்டது 2004-01-17 at the வந்தவழி இயந்திரம், The Hindu, 27 April 2003.
  4. John, Paul (8 December 2013). "The itchy feet gene". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 20 February 2017.
  5. Paul, John. "Pico Iyer’s Gujarati genes revealed". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/ahmedabad/Pico-Iyers-Gujarati-genes-revealed/articleshow/27055934.cms. 
  6. 6.0 6.1 "Pico Iyer: On Travel and Travel Writing". World Hum. 30 November 2006. பார்க்கப்பட்ட நாள் 27 September 2013.
  7. டம் டெல்யல் (10 சூலை1995). "மரணக் குறிப்பு: பைக்கோ ஐயர்". தெ இண்டிபெண்டடன்ட் (இலண்டன்). https://www.independent.co.uk/news/people/obituaryraghavan-iyer-1590756.html. பார்த்த நாள்: 27 செப்டம்பர் 2013. 
  8. Saxon, Wolfgang (24 June 1995). "Raghavan Narasimhan Iyer, 65, An Expert on East-West Cultures". The New York Times. https://www.nytimes.com/1995/06/24/obituaries/raghavan-narasimhan-iyer-65-an-expert-on-east-west-cultures.html. 
  9. "About Pico Iyer". Pico Iyer Journeys. Archived from the original on 2 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 27 September 2013.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைக்கோ_ஐயர்&oldid=3587733" இலிருந்து மீள்விக்கப்பட்டது