பொட்டாசியம் அறுபுரோமோயிரேனேட்டு

வேதிச் சேர்மம்

பொட்டாசியம் அறுபுரோமோயிரேனேட்டு (Potassium hexabromorhenate) என்பது K2ReBr6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஓர் கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2]

பொட்டாசியம் அறுபுரோமோயிரேனேட்டு
Potassium hexabromorhenate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இருபொட்டாசியம்; அறுபுரோமோ இரேனியம் (2-)
வேறு பெயர்கள்
பொட்டாசியம் அறுபுரோமோயிரேனேட்டு(IV)
இனங்காட்டிகள்
16903-70-1
ChemSpider 4907648
InChI
  • InChI=1S/6BrH.2K.Re/h6*1H;;;/q;;;;;;2*+1;+4/p-6
    Key: KJFJGUZKEHEZCT-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 71310035
  • [K+].[K+].Br[Re-2](Br)(Br)(Br)(Br)Br
பண்புகள்
Br6K2Re
வாய்ப்பாட்டு எடை 743.83 g·mol−1
தோற்றம் அடர் சிவப்பு நிற படிகங்கள்
அடர்த்தி 4.34 கி/செ.மீ3
நீருடன் வினை புரியும்
தீங்குகள்
GHS signal word எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

புரோமின் வாயு ஓட்டத்தில் பொட்டாசியம் புரோமைடையும் இரேனியத்தையும் சேர்த்தால் பொட்டாசியம் அறுபுரோமோயிரேனேட்டு உருவாகும்.

Re + 2KBr + 2Br2 → K2ReBr6

இரேனியம் மூவாக்சைடும் பொட்டாசியம் புரோமைடும் சேர்ந்த கலவையில் ஐதரோபுரோமிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் பொட்டாசியம் அறுபுரோமோயிரேனேட்டு உருவாகும்:[3]

ReO2 + 2KBr + 4HBr -> K2ReBr6 + 2H2O

செறிவூட்டப்பட்ட ஐதரோ புரோமிக் அமிலத்தில் உள்ள பொட்டாசியம் அயோடைடைப் பயன்படுத்தி பொட்டாசியம் பெர்யிரேனேட்டை ஒடுக்கினாலும் இச்சேர்மம் உருவாகும்.

2KReO4 + 6KI + 16HBr → 2K2ReBr6 + 4KBr + 3I2 + 8H2O

இயற்பியல் பண்புகள்

தொகு

பொட்டாசியம் அறுபுரோமோயிரேனேட்டு Fm3m என்ற இடக்குழுவில் கனசதுரப் படிகத்திட்டத்தில் சிவப்பு நிறப் படிகங்களாக படிகமாகிறது.[4]

வேதிப்பண்புகள்

தொகு

பொட்டாசியம் அறுபுரோமோயிரேனேட்டு ஐதரோபுரோமிக் அமிலத்தில் கரைந்து சிவப்பு அல்லது ஆழமான மஞ்சள் நிற கரைசலை உருவாக்குகிறது.[5]

தண்ணீருடன் இச்சேர்மம் வினைபுரிகிறது.

K2ReBr6 + 2H2O → ReO2 + 2KBr + 4HBr

மேற்கோள்கள்

தொகு
  1. Meloche, Villiers W.; Martin, Ronald (November 1956). "Synthesis of Potassium Hexachlororhenate and Potassium Hexabromorhenate" (in en). Journal of the American Chemical Society 78 (22): 5955–5956. doi:10.1021/ja01603a067. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/10.1021/ja01603a067. பார்த்த நாள்: 25 August 2024. 
  2. "Potassium Hexabromorhenate". American Elements. பார்க்கப்பட்ட நாள் 25 August 2024.
  3. Watt, George W.; Thompson, Richard J.; Gibbons, Jean M. (1963). "Potassium Hexachlororhenate(IV) and Potassium Hexabromorhenate(IV)". Inorganic Syntheses VII: 189–192. doi:10.1002/9780470132388.ch51. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-13166-4. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/9780470132388.ch51. பார்த்த நாள்: 26 August 2024. 
  4. Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 285. பார்க்கப்பட்ட நாள் 25 August 2024.
  5. Kemmitt, R. D. W.; Peacock, R. D. (26 January 2016). The Chemistry of Manganese, Technetium and Rhenium: Pergamon Texts in Inorganic Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 974. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-8762-4. பார்க்கப்பட்ட நாள் 25 August 2024.