பொட்டாசியம் எப்டாபுளோரோநையோபேட்டு
பொட்டாசியம் எப்டாபுளோரோநையோபேட்டு (Potassium heptafluoroniobate) என்பது F7K2Nb என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். K2NbF7 என்ற மூலக்கூற்று வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். வெண்மை நிறத்துடன் காணப்படும் இச்சேர்மம் நீரில் கரையும். நையோபியத்தின் மிக முக்கியமான புளோரைடுகளில் இதுவும் ஒன்றாகும். தாண்டலம்|தாண்டலத்திலிருந்து நையோபியத்தை பிரிப்பதில் இது பெரும்பாலும் இடைநிலையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு தனிமங்களும் பொதுவாக தாதுக்களில் ஒன்றாகக் காணப்படுகின்றன (எ.கா. கூலும்பைட்டு) மேலும் இவை மிகவும் ஒத்த சேர்மங்களை உருவாக்குவதால் இவவற்றின் பிரிப்பும் சவாலாக உள்ளது. புளோரைடுகள் மற்றும் ஆக்சிபுளோரைடுகளின் நிலைத்தன்மை மற்றும் கரைதிறன் ஆகியவை இவற்றைறைப் பிரிப்பதற்கு அடிப்படையாகும். பொட்டாசியம் எப்டாபுளோரோநையோபேட்டு உப்பைக் குறைத்தல் வினைக்கு உட்படுத்தினால் நையோபியம் உலோகம் கிடைக்கிறது.[3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டைபொட்டாசியம் எப்டாபுளோரோநையோபியம்[1]
| |
இனங்காட்டிகள் | |
16924-03-1 | |
ChemSpider | 26470453 [2] |
EC number | 240-987-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 44890706 [1] |
| |
பண்புகள் | |
F7K2Nb | |
வாய்ப்பாட்டு எடை | 304.09 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
உருகுநிலை | 735 °C (1,355 °F; 1,008 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு40% ஐதரோபுளோரிக் அமிலத்தில் கரைக்கப்பட்ட பொட்டாசியம் பைபுளோரைடு கரைசலில் நையோபியம் பெண்டாக்சைடை கரைத்து பொட்டாசியம் எப்டாபுளோரோநையோபேட்டு உப்பு தயாரிக்கப்படுகிறது:[4]
- Nb2O5 + 4 KHF2 + 6 HF -> 2K2NbF7 + 5 H2O
பொட்டாசியம் எப்டாபுளோரோநையோபேட்டும் பொட்டாசியம் எப்டாபுளோரோதாண்டலேட்டும் ஒத்தகட்டமைப்பைக் கொண்டுள்ளன. எதிர்மின் அயனி தோராயமான C2v சமச்சீர்நிலையைக் கொண்டுள்ளது. இது முகம் மூடிய முக்கோணப் பட்டகம் ஆகும். Nb-F பிணைப்பு தூரங்கள் 1.940--1.978 Å வரம்பில் உள்ளன.[5]
அலைமாலை அளவீடுகள் எப்டாபுளோரைடானது கரைசலில் எக்சாபுளோரைடாக மாறுகிறது என்பதைக் காட்டுகிறது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Niobium potassium fluoride". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 May 2024.
- ↑ "POTASSIUM HEPTAFLUORONIOBATE(V) | F7K2Nb | ChemSpider". www.chemspider.com. பார்க்கப்பட்ட நாள் 22 May 2024.
- ↑ Matthiesen, F.; Christensen, E.; von Barner, J. H.; Bjerrum, N. J. (1996). "The Redox Chemistry of Niobium(V) Fluoro and Oxofluoro Complexes in LiF-NaF-KF Melts". Journal of the Electrochemical Society 143 (6): 1793–1799. doi:10.1149/1.1836906. Bibcode: 1996JElS..143.1793M. https://archive.org/details/sim_journal-of-the-electrochemical-society_1996-06_143_6/page/1793.
- ↑ W. Kwasnik (1963). "Potassium Heptafluoroniobate (V)". In G. Brauer (ed.). Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Vol. 2pages=255. NY,NY: Academic Press.
- ↑ Brown, G. M.; Walker, L. A. (1966). "Refinement of the structure of potassium heptafluoroniobate, K2NBF7, from neutron-diffraction data". Acta Crystallographica 20 (2): 220–229. doi:10.1107/s0365110x66000458. Bibcode: 1966AcCry..20..220B.
- ↑ Keller, O. L. (1963). "Identification of Complex Ions of Niobium(V) in Hydrofluoric Acid Solutions by Raman and Infrared Spectroscopy". Inorganic Chemistry 2 (4): 783–787. doi:10.1021/ic50008a029.