பொட்டாசியம் மாலேட்டு
பொட்டாசியம் மாலேட்டு (Potassium malate) என்பது K2(C2H4O(COO)2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். மேலிக் அமிலத்தின் பொட்டாசியம் உப்பாக இச்சேர்மம் கருதப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இருபொட்டாசியம் 2-ஐதராக்சிபியூட்டேன் டையோயேட்டு
| |
வேறு பெயர்கள்
இருபொட்டாசியம் மேலேட்டு ஐ351
| |
இனங்காட்டிகள் | |
585-09-1 | |
ChemSpider | 144374 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 164689 |
| |
UNII | 5YO4AE78DB |
பண்புகள் | |
C4H4K2O5 | |
வாய்ப்பாட்டு எடை | 210.27 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
உணவுச் சேர்ப்பொருளாக ஐரோப்பிய எண் ஐ351 என்ற எண்ணால் இது அடையாளப்படுத்தப்படுகிறது.[1] அமிலத்தன்மை சீராக்கி அல்லது அமிலமாக்கியாக பொட்டாசியம் மாலேட்டு பயன்படுத்தப்படுகிறது. அடைக்கப்பட்ட காய்கறிகள், வடிசாறுகள், சுவைகூட்டுகள், பழ பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் போன்றவை எடுத்துக்காட்டுகளாகும். ஓர் ஆக்சிசனேற்ற மற்றும் உணவு சுவையூட்டும் முகவராகவும் இது செயல்படுகிறது.
ஒரு தாவரத்தின் வேர்களில் இருந்து தாவரத்தின் இலைகளுக்கு நைட்ரேட்டு உப்பைக் கொண்டு செல்வதில் இது ஒரு முக்கியமான சேர்மமாகும். பொட்டாசியம் மாலேட்டு உப்பு என்பது இலைகளிலிருந்து வேருக்கு கடத்தப்படும் ஓர் உப்பாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Approved additives and E numbers". UK Food Standards Agency.