பொட்டு சுரேஷ் படுகொலை

பொட்டு சுரேஷ் என்பவர் திமுக கட்சி தொண்டர். மதுரையில் வசித்து வந்த இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார். சுரேஷ்பாபு என்கிற பெயருடைய இவர் மதுரை திமுகவில் இருந்த மற்றுமொரு சுரேஷ் என்பவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக பொட்டு சுரேஷ் என்று அழைக்கப்பட்டு வந்தார். மு. க. அழகிரியின் ஆதரவாளரான இவர் தமிழகத்தின் தென் மாவட்டத்தில் கட்சியின் செல்வாக்கு மிகுந்த நபராகவும் இருந்து வந்தார். தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு, நில அபகரிப்பு வழக்கில், ஜூலை 19 2011 அன்று கைது செய்யப்பட்டார். ஜூலை 25 அன்று மேலும் ஒரு மோசடி வழக்கில் மதுரை, அண்ணாநகர் காவல் நிலையக் காவலர்களால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஜூலை 26 அன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது நில மோசடி உட்பட பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் பின்னர் பிணையில் விடுதலையானார். அதன் பிறகு அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்நிலையில் ஜனவரி 31, 2013 அன்று மதுரையில் அடையாளம் தெரியாதவர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். [1]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு