பொதும்பு
மதுரை மாவட்டத்திலுள்ள கிராமம்
பொதும்பு, மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பொதும்பு ஊராட்சியில் அமைந்த கிராமம் ஆகும்.[1] 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பொதும்பு கிராம மக்கள்தொகை 1,823 ஆகும்.[2]
அமைவிடம்
தொகுமதுரையிலிருந்து அலங்காநல்லூர் செல்லும் சாலையில், 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
சிறப்புகள்
தொகுபொதும்பில் கிழார், பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார், பொதும்பில் புல்லாளங் கண்ணியார் போன்ற சங்க காலப் புலவர்களின் பெயரோடு பொதும்பு தொடர்புடையது. இப்புலவர்கள் பொதும்பிலே பிறந்தவர்களாகவோ அல்லது பொதும்பு சார்ந்த தொடர்புடையவர்களாகவோ இருக்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Madurai North Taluka