பொதுவுடைமைக் கூட்டமைப்பு

பொதுவுடைமைக் கூட்டமைப்பு (Communist League, கம்யூனிஸ்ட் லீக், செருமன்: Bund der Communisten) என்பது 1847 ஆம் ஆண்டில் இலண்டனில் அமைக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அரசியல் கட்சி ஆகும். கார்ல் சாப்பர் தலைமையிலான நீதியாளர் கழகம் என்ற அமைப்பும், காரல் மார்க்சு, பிரெட்ரிக் எங்கெல்சு போன்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு பெரசெல்சில் இயங்கி வந்த கம்யூனிசத் தொடர்புக் குழுவும் இணைந்து கம்யூனிஸ்டு லீக் என்ற இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இக்கட்சியே முதலாவதாக அமைக்கப்பட்ட மார்க்சிய அரசியல் கட்சி எனக் கருதப்படுகிறது. இக்கட்சியின் சார்பிலேயே மார்க்சு, எங்கெல்சு ஆகியோர் தமது புகழ்பெற்ற பொதுவுடைமை அறிக்கையை 1847 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிட்டனர். கோல்ன் கம்யூனிஸ்டு வழக்கை அடுத்து 1852 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்டு லீக் கட்சி கலைக்கப்பட்டது.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. Marx, Karl; Engels, Friedrich (2008). The Communist Manifesto. Wildside. பக். 1–2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4344-9945-5. http://books.google.com/books?id=rRf56dMiudAC&pg=PA1. 
  2. "Cologne Communist Trial (1852)". Encyclopedia of Marxism. பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2011.