பொது பல சேனா

பொது பல சேனை (Bodu Bala Sena, பொது பல சேனா, சிங்களம்: බොදු බල සේනා, "பௌத்தர்களின் அதிகாரப் படை")[1] என்பது இலங்கையின் கொழும்பு நகரைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு பௌத்த அமைப்பாகும்.[2] இது பௌத்த மெய்யியல், சிங்களப் பண்பாடு, சிங்கள மரபைப் பாதுகாக்கும், தீவிரவாத அமைப்பு[3]

பொது பல சேனை
Bodu Bala Sena
நிறுவனர்கள்கிராம விமலஜோதி தேரர், கலகொடாத்தா ஞானசார தேரர்
வகைஅரசியல் சார்பற்ற, பௌத்த தீவிரவாத இயக்கம்
நிறுவப்பட்டதுசூலை 2012
தலைமையகம்இலங்கை
வேலைசெய்வோர்கிராம விமலஜோதி தேரர், இணை-நிறுவனர்; கலகொடாத்தா ஞானசார தேரர், பொதுச் செயலாளர்[1]
சேவை புரியும் பகுதிஇலங்கை
Focusபௌத்தம், பௌத்தர்களைப் பாதுகாத்தல்
வழிமுறைஎதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், செயற்பாடுகள்,தீவரவாத தாக்குதல்கள்
சொந்தக்காரர்வண. கிராம விமலஜோதி தேரர்
இணையத்தளம்bodubalasena.org

நடவடிக்கைகள் தொகு

இலங்கை விடயங்களில் இந்தியாவின் தலையீடு, இந்தியக் கலைஞர்களின் நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு,[4] கனடாவில் நிகழ்ந்த பொங்கு தமிழ் நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு, இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு எதிர்ப்பு போன்றவை பொது பல சேனாவின் சில எதிர்ப்பு நடவடிக்கைகளாகும்[3]

அலால் உணவுக்கு எதிர்ப்பு தொகு

2013 பெப்ரவரியில் இவ்வியக்கம் ஹலால் இறைச்சிக்கு எதிராகக் குரல் கொடுத்தது, 2013 ஏப்ரல் மாதத்துக்கிடையில் நாட்டில் உள்ள கடைகளில் அலால் இறைச்சி விற்பனை தடை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியது[5] இசுலாமிய மதகுருக்கள் ஹலால் சான்றிதழ் வழங்குவது தடை செய்யப்பட வேண்டும் என பௌத்த மதகுரு வண. கிராம விமலஜோதி தேரர் அரசிடம் கேட்டுக் கொண்டார், "நாட்டின் மக்கள்தொகையில் 90 விழுக்காட்டினர் பௌத்த, இந்து, கிறித்தவர்களாக இருக்கும் போது, அவர்களை அலால் உணவை உண்ண நிர்ப்பந்திக்க முடியாது," என அவர் கூறினார்.[6] இவர்களின் எதிர்ப்பை அடுத்து, அலால் சான்றிதழை வழங்கும் அனைத்திலங்கை ஜமியாதுல் உலாமா சபையினர் பொது பல சேனா, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து அலால் சான்றிதழ் வழங்குவதை இடை நிறுத்தி வைத்துள்ளனர்.[7][8]

மேற்கோள்கள் தொகு

  1. "Sri Lanka Buddhist organization to surround the Ministry unless action taken against alternate Buddhist center : South Asia : Buddhist News : Buddhistdoor". Enews.buddhistdoor.com. 2012-06-27. Archived from the original on 2012-07-06. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  2. "Lankan mission slams false report on jailed maid". ArabNews. 2012-07-08. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  3. 3.0 3.1 door bodubalasena (2008-11-06). "bodubalasena". YouTube. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  4. "Budu Balu Sena Has Just Woken - Sri Lanka". Lankanewspapers.com. 2008-10-22. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  5. "Sri Lanka hardline group calls for halal boycott". பிபிசி. 17 பெப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-03-23. {{cite web}}: Check date values in: |date= (help)
  6. "Sri Lankan monks launch halal meat boycott". Australia Network News. Feb 18, 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.
  7. "Sri Lanka Muslim clerics' organization to decide on Halal certification Monday". ColomboPage. Mar 10, 2013. Archived from the original on 2013-03-13. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.
  8. "Sri Lanka withdraws Halal logo from local products". NZWeek. 2013-03-11. Archived from the original on 2013-03-14. பார்க்கப்பட்ட நாள் 2013-03-25.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொது_பல_சேனா&oldid=3590378" இலிருந்து மீள்விக்கப்பட்டது