பொத்துவில் அஸ்மின்

பொத்துவில் அஸ்மின் அல்லது யு. எல். எம். அஸ்மின் (இயற்பெயர்) (Pottuvil Asmin or U. L. M. Asmin, பிறப்பு: மே 2, 1983) ஓர் ஈழத்துக் கவிஞர்.[1] இவர் மரபுக் கவிதை எழுதிவரும் கவிஞராகவும் திரைப்படப் பாடலாசிரியராகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் அறியப்பட்டு வருகின்றார்.[2] கவிதைத் துறையில் சனாதிபதி விருது (2001), அகஸ்தியர் விருது (2011), கலைமுத்து விருது (2011), கலைத்தீபம் விருது (2011) கவிவித்தகன்(2015) எனப் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றிருக்கும் இவர், சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை இரண்டு தடவைகள் (2010,2011) பெற்றுள்ளார்.[3] செந்தூரம் என்ற செய்தித்தாள் இணைப்பிதழும் கவிஞன் என்ற இதழும் இவருடைய ஒளிப்படத்தை அட்டைப் படத்தில் இட்டுச் சிறப்பித்துள்ளன.[4]

பொத்துவில் அஸ்மின் (Pottuvil Asmin)
பிறப்புயு. எல். எம். அஸ்மின்
மே 2, 1983(1983-05-02)
பொத்துவில், இலங்கை
இருப்பிடம்இலங்கை
பணிஊடகவியலாளர், கவிஞர், பாடலாசிரியர், தொகுப்பாளர்
சமயம்இஸ்லாம்
விருதுகள்ஜனாதிபதி விருது (2001), அகஸ்தியர் விருது (2011), கலைமுத்து விருது (2011), கலைத்தீபம் விருது (2011), கவிவித்தகன்(2015),சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது (இரண்டு தடவைகள்-2010, 2011)
வலைத்தளம்
வார்ப்புரு:Www.kavinger-asmin.blogspot.com

வாழ்க்கைக் குறிப்புதொகு

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட அஸ்மின், மர்ஹூம் உதுமாலெவ்வை, ஆயிஷா தம்பதியினரின் மூத்த புதல்வராவார்.[2] இவர் பொத்துவில் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்.கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றவர்.[1]

இலக்கிய ஆர்வம்தொகு

சிறு வயது முதலே இவர் இலக்கிய ஆர்வம் மிக்கவராக காணப்பட்டார்.[5] இவருடைய முதவாவது கவிதை மார்ச் 25, 2000இல் தினக்குரல் செய்தித் தாளில் என்ன தவம் செய்தாயோ எனும் தலைப்பில் வெளியானது.[6] அதைத் தொடர்ந்து இவரது கவிதைகள், சிறுகதைகள், பத்தி எழுத்துக்கள், நேர்காணல்கள், பாடல்கள் இலங்கையின் தேசியச் செய்தித் தாள்கள், சிற்றிதழ்கள், அனைத்துலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள், இணையச் சிற்றிதழ்கள் ஆகியவற்றிலும் மின்னணுவியல் ஊடகங்கள் பலவற்றிலும் வெளியாகியுள்ளன..[2]

வானொலி, தொலைக்காட்சிகளில்தொகு

இவரது படைப்புக்கள் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் இடம்பெற்று வருகின்றன. தென்றல் பண்பலை, இலங்கை வானொலி முஸ்லிம் சேவை, சக்தி பண்பலை, வசந்தம் பண்பலை, வெற்றி பண்பலை, பிறை பண்பலை, வெளிச்சம் பண்பலை, ஊவா சமூக வானொலி, ரீ. ஆர். டி. வானொலி (பிரான்சு), கனடா தமிழ் வானொலி, ஐ. பி. சி (இலண்டன்), யேர்மன் தமிழோசை, மின்னல் பண்பலை (மலேசியா), வேல்ட் தமிழ் நியூசு, லண்டன் தமிழ் வானொலி, வெற்றிமுரசு வானொலி (இத்தாலி) போன்ற வானொலிகளிலும் சக்தி தொலைக்காட்சி (இசை இளவரசர்கள், குட்மோர்னிங் ஸ்ரீலங்கா), வசந்தம் தொலைக்காட்சி (தித்திக்குதே, தூவானம்), டான் தொலைக்காட்சி (மண்வாசனை, தாலாட்டு), நேத்ரா தொலைக்காட்சி (பிரவாகம்) போன்ற ஊடகங்களிலும் இவரது படைப்புகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன..[2]

இதழாசிரியராகதொகு

2000களில் பொத்துவில் பிரதேசத்தை மையமாக கொண்டு வெளிவந்த தேடல் எனும் கலை, இலக்கியச் சிற்றிதழின் முதன்மை ஆசிரியராகவும் சுடர் ஒளி வார வெளியீட்டின் கவிதைப் பகுதி ஆசிரியராகவும் பணிபுரிந்த இவர் உணர்வுகள் என்ற பகுதியில் ஈழநிலா என்ற புனைபெயரில் ஈழத்தின் இலக்கிய நிகழ்வுகள், எழுத்தாளர்கள் குறித்துத் தனது மனப்பதிவுகளை எழுதி வந்துள்ளார்..[2] 55 கிழமைகளாக இவரது பத்திகள் வெளிவந்துள்ளன.

ஊடகத்துறையில்தொகு

டான் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் டான் தமிழ் ஒலி வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் சிறிது காலம் பணிபுரிந்த இவர் இப்பொழுது இலங்கைத் வசந்தம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றார்.வசந்தம் தொலைக்காட்சியில் இவர் தயாரித்து வழங்கும் 'தூவானம்' கலை இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சி இரண்டு முறை சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சிக்கான அரச விருதினைப் பெற்றுள்ளது.ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பல இளைய தலைமுறைப் படைப்பாளிகள் தமிழ் பேசும் உலகில் 'அடையாளம்' என்ற பகுதியினூடாக அடையாளம் பெற்றுள்ளனர்[7]

திரைப்படத்துறையில்தொகு

விஜய் ஆண்டனியின் இசையில் வெளிவந்த நான் திரைப்படத்திற்காகத் தப்பெல்லாம் தப்பே இல்லை... என்ற பாடலையும் எழுதியுள்ளார்.[8] பாடலாசிரியர் ஒருவரை அறிமுகம் செய்யும் நோக்கோடு அனைத்துலக ரீதியில் நடத்தப்பட்ட பாடலியற்றல் போட்டியில் வழங்கப்பட்ட கதைச்சூழலுக்கும் இசைக்கும் ஏற்பப் பாடல் எழுதி அதில் 20000 போட்டியாளர்களுக்குள் முதலாமிடம் பெற்று நான் திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பினை இவர் பெற்றார்.[9]

செவ்வேளின் தயாரிப்பிலும் கேசவராஜனின் இயக்கத்திலும் வெளிவந்த பனைமரக்காடு திரைப்படத்தில் இசையமைப்பாளர் விமல் ராஜாவின் இசையில் உயிரிலே உன் பார்வையால் பூ பூத்ததே என்ற பாடலை எழுதியிருக்கின்றார்.[10]

இயக்குநர் சு.வரதகுமார் இயக்கிய வல்லைவெளி திரைப்படத்திலும் இசையமைப்பாளர் க. ஜெயந்தனின் இசையில் எங்கோ பிறந்தவளே என்ற பாடலை எழுதியிருக்கின்றார்.[11]

ரந்தீர்கபூர் அனுஸ்கா சர்மா நடிப்பில் 2014 ஆண்டு வெளிவரவுள்ள பம்பாய் வெல்வெட் ஹிந்தி திரைப்படத்தில் சிறு காட்சியில் தோன்றி நடித்துள்ளார்.(2013)

இயக்குனர் ப.சிவகாந்தனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள கடன்காரன் திரைப்படத்தில் ஜெயந்தனின் இசையில் பச்சமுத்தம் என்ற கிராமிய பாடலை எழுதியுள்ளார்(2013)

நடிகர் ஆர்யாவின் தயாரிப்பில் இயக்குனர் ஜீவாசங்கரின் இயக்கத்தில் வெளிவந்த அமரகாவியம் திரைப்படத்தில் ஜிப்ரானின் இசையில் 'தாகம் தீர கானல் நீரை காதலின்று காட்டுதே..' என்ற பாடலை எழுதியுள்ளார்.இந்தப்பாடல் 2014 வெளிவந்த 100 பாடல்களில் 4 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

இயக்குனர் ராஜ ராஜாவின் இயக்கத்தில் வெளிவரவுள்ள 'யாவும் காதலே' திரைப்படத்தில் வல்லவன் இசையில் 'மார்லின் மன்றோ மகளா நீ மாடர்ன் இரவின் பகலாநீ' என்ற பாடலை எழுதியுள்ளார்.(2015)

இயக்குனர் அனூப் அரவிந்தனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள தேன்ல ஊர்ன மிளகாய் என்ற திரைப்படத்தில் முழுப்பாடலையும் இவர் எழுதியுள்ளார்.இவர் எழுதிய பாடலின் வரி ஒன்றையே படத்தின் பெயராகவும் பதிவு செய்துள்ளார்கள்.(2016)

இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராக பணிபுரிந்த முத்துக்குமாரின் இயக்கத்தில் வெளிவரவுள்ள 'எந்த நேரத்திலும்' திரைப்படத்தில் இசையமைப்பாளர் சதீஸின் இசையில் திரைப்படத்தின் முழுப்பாடலையும் இவர் எழுதியுள்ளார்.(2016)

இசையமைப்பாளர் தாஜ்நூரின் இசையில் வெளிவரவுள்ள 'காந்தாரி' என்ற திரைப்படத்துக்கு ஒரு பாடல் எழுதியுள்ளார்(2016)

இயக்குனர் 'காதல்' சுகுமாரின் இயக்கத்தில் வெளிவரவுள்ள 'சும்மாவே ஆடுவோம்' என்ற திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் 'முத்து முத்து கருவாயா' என ஆரம்பிக்கும் அழகிய கிராமத்து காதல் பாடலை எழுதியுள்ளார்.இத்திரைப்படம் இவ்வாண்டு வெளிவரவுள்ளது.(2016)

வெளியிட்ட நூல்கள்தொகு

1.விடைதேடும் வினாக்கள் 2002

2.விடியலின் ராகங்கள் 2003

3.பாம்புகள் குளிக்கும் நதி 2013

வெளிவர இருக்கும் நூல்கள்தொகு

 • )[12]
 • ஈழநிலாவின் உணர்வுகள (பத்தி எழுத்து நூல்)[2]
 • நிலவு உறங்கும் டயறி (சிறுகதை நூல்)
 • தட்டாதே திறந்து கிடக்கிறது (கவிதை-2016)
 • கவிஞர் அஸ்மின் பாடல்கள் [13]

இவரது படைப்புக்கள் இடம்பெற்றுள்ள நூல்கள்தொகு

 • முகவரி தொலைந்த முகங்கள் - 2000 (கவிதை நூல்)
 • அடையாளம் - 2010 (கவிதை நூல் - தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் சங்க வெளியீடு)
 • இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் விபரத்திரட்டு பாகம் மூன்று .- 2003
 • ஜீவநதி நேர்காணல்கள் - 2010(15 ஈழத்து எழுத்தாளர்களின் நேர்காணல்கள்)
 • வியர்வையின் ஓவியம் 2010 (தொகுப்பு நூல்)
 • பட்சிகளின் உரையாடல்-2011 (கவிதை நூல்)

இவரது பாடல்கள்தொகு

 • அண்ணாச்சி கோட்டையிலே....
 • வா வா அன்பே நீவா...
 • வத்தளக்குட்டி...
 • அடிநெஞ்சில்...
 • காலையில் மாலையில்
 • எங்கோ பிறந்தவளே...
 • புறப்படு தோழா...
 • பூபாளம் வாழ்வினில் பாடும்...
 • என்பாடல் உன்காதில்...
 • நெஞ்சுக்குள்ள...
 • மழைப்பாட்டு....
 • மாநபியே....
 • காத்தமுன் நபி...
 • உயிரிலே....2011
 • நான் பாடினேன் தேவதை நீகேட்கவே….2011
 • விழியில் விழுந்தாயே ....2011
 • மின்னலிலே காணி வெட்டி 2011
 • உச்சிப்புடி பொண்ணே 2011
 • காந்தள் பூக்கும் தீவிலே(2011)
 • எந்தன்காதலி (2012)
 • தப்பெல்லாம் தப்பே இல்லை (2012)
 • பச்சமுத்தம் நச்சுன்னுதா (2013)
 • வெட்டவெளி பொட்டலிலே (2013)
 • மனிதா மனிதா(2014)
 • ஆத்தா கருமாரி(2014)
 • தாகம்தீர கானல் நீரை(2014)
 • சாகடிக்கவா பொறந்த(2015)
 • வெண்மேகம் ஏனோ இன்று சிவந்தததே(2015)
 • நான் நானா நீயல்லவா(2015)
 • தினம் தினம்(2015)
 • ஒன்ன மறந்து நானும் இங்கே(2015)

கௌரவங்கள்தொகு

 • மலேசியாவில் 2011 இல் நடைபெற்ற 6வது உலக இசுலாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் கலந்துகொண்டு கவிதை பாடினார். மலேசியத் துணையமைச்சர் டத்தோ சரவணன் பொன்னாடை போர்த்துக் கௌரவித்தார்.
 • இலங்கை 'தடாகம்' கலை, இலக்கிய வட்டத்தினால் கலை, இலக்கிய, ஊடகத்துறையில் ஆற்றிவரும் பணிக்காக 26.6.2011 அன்று பொன்னாடை போர்த்தப்பட்டு அகஸ்தியர் விருதும் கலைத்தீபம் பட்டமும் வழங்கப்பட்டன.
 • லக்ஸ்டோ ஊடக அமைப்பினால் கலை, இலக்கிய, ஊடகத்துறையில் ஆற்றிவரும் பணிக்காக 26.6.2011 அன்று 'தங்கப்பதக்கம்' வழங்கப்பட்டு கலைமுத்து பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கபட்டார்.

விருதுகள்தொகு

விருது ஆண்டு
சனாதிபதி விருது 2001[14]
சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது 2010[15]
சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது 2011[16]
இசை இளவரசர்கள் விருது 2008[17]
அகஸ்தியர் விருது 2011[18]
கலைமுத்து விருது 2011
கலைத்தீபம் விருது 2011[3]
 • 6வது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கௌரவ விருது (2011)
 • அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளத்தின் கௌரவ விருது (2011)
 • ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய பேரவையின் கௌரவவிருது (2011)
 • பேராதனை பல்கலைக்கழகத்தின் தங்கப்பதக்கம் (2003)
 • லக்ஸ்டோ ஊடக அமைப்பின் 'தங்கப்பதக்கம்' (2011)
 • தேசிய கவிஞர்கள் சம்மேளனத்தின் காவிய சுவர்ண விருது (2012)
 • பாம்புகள் குளிக்கும் நதி' கவிதை நூலுக்காக கவிஞர் எஸ்.பீ.பாலமுருகன் பேனா கலை இலக்கிய விருது சிறப்பு சான்றிதழ்.2014
 • வசந்தம் தொலைக்காட்சியில் இவர் தயாரித்து வழங்கும் 'தூவானம்' கலை இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சிக்காக முறை சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சிக்கான தேசிய விருதினை பெற்றுள்ளார் (2015)

பரிசில்கள் மற்றும் விருதுகள்தொகு

தேசிய ரீதியிலான கவிதைப்போட்டிகளில் பங்கேற்று பல தடவைகள் பரிசில்கள், விருதுகள் வென்றுள்ளார்.

 • மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பின் முதலாவது நினைவு நாளை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் முதலாம் பரிசு -(ஜனாதிபதி விருது). இந்த விருது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் 2001.09.16 அன்று வழங்கப்பட்டது.
 • பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ் சாகித்திய விழாவை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடத்தப்பட்ட கவிதைப்போட்டியில் மூன்றாம் பரிசு.-2002
 • பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்சங்கத்தின் பவளவிழாவை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதலாம் பரிசு (தங்கப்பதக்கம்)-2003
 • அகில இலங்கை இந்து மாமன்றம் அகில இலங்கை மட்டத்தில் நடாத்திய சொல்லோவிய போட்டியில் சிறப்புப் பரிசு.2003
 • விபவி கலாசார மையம் அகில இலங்கை மட்டத்தில் நடத்திய கவிதைப்போட்டியில் சிறப்புப் பரிசு.2003
 • பிரான்ஸ் மகாகவி பாரதியார் மன்றம் சர்வதேச ரீதியாக நடாத்திய கவிதைப்போட்டியில் சிறப்புப் பரிசு.2007
 • சக்தி தொலைக்காட்சியினால் அகில இலங்கை மட்டத்தில் நடத்தப்பட்ட 'இசைஇளவரசர்கள்'போட்டி நிகழ்ச்சியில் பாடலாசிரியருக்கான அங்கீகாரம்.-2008
 • இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் 'வியர்வையின் ஓவியம்' கலை நிகழ்வை முன்னிட்டு அகில மட்டத்தில் நடத்தப்பட்ட பாடலியற்றல் போட்டியில் முதலாம் பரிசு.-(சிறந்த பாடலாசிரியர் விருது)-2010
 • இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் 'வியர்வையின் ஓவியம்' கலை நிகழ்வை முன்னிட்டு அகில மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் போட்டியில் இரண்டாம் பரிசு.- 2010
 • இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்சங்கம் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் முதலாவது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் மூன்றாம் பரிசு.-2010
 • 'லங்கா' பத்திரிகை நிறுவனத்தின் புதிய சிறகுகள்-2011 கலை நிகழ்வை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் சிறப்புப் பரிசு-2011
 • கண்டி கலை இலக்கிய இரசிகர் மன்றமும் அகிலம் அறிவியல் சஞ்சிகையும் இணைந்து நடத்திய அகில இலங்கை மட்ட கவிதைப்போட்டியில் சிறப்பு பரிசு-2011
 • இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் 'வியர்வையின் ஓவியம்' கலை நிகழ்வை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட பாடலியற்றல் போட்டியில் முதலாம் பரிசு - சிறந்த பாடலாசிரியர் விருது -2011
 • இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் 'வியர்வையின் ஓவியம்' கலை நிகழ்வை முன்னிட்டு அகில மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் போட்டியில் மூன்றாம் பரிசு.- 2012
 • இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் 'வியர்வையின் ஓவியம்' கலை நிகழ்வை முன்னிட்டு அகில மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் போட்டியில் முதலாம் பரிசு.- 2013

வெளி இணைப்புகள்தொகு

 • 1.0 1.1 கவிஞர் ஸி. எஸ். காந்தி. "கவிஞர் ஈழநிலா பற்றிய அறிமுகக் குறிப்புக்கள்". வார்ப்பு. பார்த்த நாள் அக்டோபர் 14, 2012.
 • 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "அஸ்மின்:". தமிழாதர்சு. பார்த்த நாள் அக்டோபர் 14, 2012.
 • 3.0 3.1 க. கோகிலவாணி (நவம்பர் 18, 2011). "'அரச விருதுகளில் பக்கச்சார்பும் முதுகுசொறிதலுமே காணப்படுகின்றது' : கவிஞர் அஸ்மின்". தமிழ்மிரர். பார்த்த நாள் அக்டோபர் 14, 2012.
 • கவிஞர் அஸ்மின் (ஏப்ரல் 21, 2012). "கவிஞர் அஸ்மினின் நேர்காணல்.இலண்டன் தமிழ் வானொலி". யூட்டியூப்பு. பார்த்த நாள் அக்டோபர் 14, 2012.
 • க. பரணீதரன். ஜீவநதி நேர்காணல்கள். ஜீவநதி. 
 • "முன்னுதாரண இலக்கியவாதி கவிஞர் அஸ்மின்...". சிட்டுக்குருவி. பார்த்த நாள் அக்டோபர் 14, 2012.
 • "கவிஞர் பொத்துவில் அஸ்மின் தேசிய விருது பெற்றார்.". லங்காமுஸ்லிம் (அக்டோபர் 31, 2011). பார்த்த நாள் அக்டோபர் 14, 2012.
 • "அஸ்மின்". இராகா. பார்த்த நாள் அக்டோபர் 14, 2012.
 • "விடுதலைபுலிகளுக்கு எதிரான கவிஞரா? - விஜய் ஆண்டனி பதில்". நக்கீரன் சினிமா. பார்த்த நாள் அக்டோபர் 14, 2012.
 • "பொத்துவிலுக்கு பெருமை சேர்க்கும் கவிஞர் பொத்துவில் அஸ்மின்". நியூப்பொத்துவில் (சூலை 31, 2012). பார்த்த நாள் அக்டோபர் 15, 2012.
 • "யாழ்ப்பாணக் கலைஞர்களின் ‘எங்கோ பிறந்தவளே’ பாடல்". துருவம் (ஏப்ரல் 24, 2012). பார்த்த நாள் அக்டோபர் 15, 2012.
 • "கவிஞர் பொத்துவில் அஸ்மின் தேசிய விருது பெற்றார்". தமிழ்ஸ்டார் (அக்டோபர் 29, 2011). பார்த்த நாள் அக்டோபர் 15, 2012.
 • கவிஞர் அஸ்மின் (பெப்ரவரி 11, 2011). "படைப்பாளி அறிமுகம்-04- கவிஞர் பொத்துவில் அஸ்மின்". கவிஞர் அஸ்மின் படைப்புக்கள். பார்த்த நாள் அக்டோபர் 15, 2012.
 • "கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது". திண்ணை (அக்டோபர் 30, 2011). பார்த்த நாள் அக்டோபர் 16, 2012.
 • "கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது". சாளரம். பார்த்த நாள் அக்டோபர் 16, 2012.
 • "கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது". தமிழ்மிரர் (அக்டோபர் 29, 2011). பார்த்த நாள் அக்டோபர் 16, 2012.
 • "தென்னிந்திய சினிமாவைத் திரும்பி பார்க்க வைத்த இலங்கை கலைஞர்களின் பாடல்". யாழ் மண் (நவம்பர் 29, 2011). பார்த்த நாள் அக்டோபர் 16, 2012.
 • "தடாகம்' கலை- இலக்கிய வட்டத்தின் அகஸ்தியர் விருது.". நேசம் நெற் (சூலை 2, 2011). பார்த்த நாள் அக்டோபர் 16, 2012.
 • "https://ta.wikipedia.org/w/index.php?title=பொத்துவில்_அஸ்மின்&oldid=2273194" இருந்து மீள்விக்கப்பட்டது