பொன் அருணாசலம்

தமிழ் எழுத்தாளர்

பொன். அருணாசலம் (Pon Arunachalam) என்பவர் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் சுய முன்னேற்றம், சோதிடம், வரலாறு, வாழ்க்கை வரலாறு மற்றும் பிற கட்டுரைகளாக புனைவு அல்லாத நூல்களையும், கவிதை, புதினங்கள், 250 சிறுகதைகள் மற்றும் 25 பிற படைப்புகளை எழுதியுள்ளார். தனது குடும்ப புதினங்கள் மற்றும் தன்னம்பிக்கை நூல்கள் மூலம் தமிழ் மக்களின் இதயங்களில் தனி இடத்தைப் பிடித்தவர்.

பொன் அருணாசலம்
பிறப்பு27 சூன் 1946 (1946-06-27) (அகவை 77)
தூத்துக்குடி, தமிழ்நாடு
பணிஎழுத்தாளர்

வாழ்க்கை தொகு

பொன். அருணாச்சலம் 1946 ஆம் ஆண்டு சூன் 27 ஆம் நாள் தூத்துக்குடியில் பிறந்தார். 1968 ஆம் ஆண்டு தனது படிப்பை முடித்த இவர், 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தால் கூட்டுறவு மூத்த ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். இவர் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கிய காலகட்டத்தில் வேலூரில் தனது முதல் பதவியைப் பெற்றார்.

பங்களிப்புகள் தொகு

1973ல் வேலூர் மாலை முரசு இதழில் இவரது முதல் சிறுகதை வெளியானது. இந்த பொற்காலம் இவரது வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டமாகும். ஏனெனில் அச்சமயத்தில் எழுத இவருக்கு அதிக நேரம் கிடைத்தது. தொடர்ந்து தினமணிக் கதிர், குங்குமம், தேவி, சினிமா எக்ஸ்பிரஸ், ஆனந்த விகடன், குமுதம், இதயம் பேசுகிறது, ராணி, தாய், வானொலி கதை மன்றம் உள்ளிட்ட தமிழ் இதழ்களில் தொடர்ந்து எழுதிவந்தார்.

மாலை மதி, தினமணிக் கதிர் மாத இதழ்களில் இவரது புதினங்கள் வெளிவந்தன .

பரிசுகள் மற்றும் வெளியீடுகள் தொகு

1990ல் நடந்த "தேவி வார இதழ்" நடத்திய சிறுகதைப் போட்டியில் அருணாசலம் முதல் பரிசு பெற்றார்.

லேனா தமிழ்வாணன் மற்றும் ரவி தமிழ்வாணன் ஆகியோரால் சென்னையில் நடத்தப்படும் மணிமேகலைப் பிரசுரம் இவரது அனைத்து புகழ்பெற்ற எழுத்துக்களையும் 25 புத்தகங்களாக வெளியிட்டது.[1]

பணி தொகு

பொன் அருணாச்சலம் 2002-ம் ஆண்டு துணைப் பதிவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆனால் இவரது இலக்கியப் பங்களிப்பு இன்னும் தொடர்கிறது.[2]

வெளியீடுகள் தொகு

1. சுவரில் ஒரு முகம் சிரிக்கிறது - புதினம்
2. ஒரு மலரின் ஏக்கம் - சிறுகதை தொகுப்பு
3. வீட்டுப் பறவைக்கு விடுதலை உண்டா? - சிறுகதை தொகுப்பு
4. வித்யாவுக்கு விடிந்தால் கல்யாணம் - சிறுகதை தொகுப்பு
5. ஒரு குயில் தனியாக பாடுகிறது - புதினம்
6. பாசத்தின் விலை - சிறுகதை தொகுப்பு
7. வானத்தில் ஒரு பூந்தோட்டம் - புதினம்
8. கதை எழுதும் வெற்றி ரகசியம் - சுய முன்னேற்ற கட்டுரை
9. இதயத்தில் வரைந்த ஓவியம் - புதினம்
10. அம்மா வருவாளா ?- புதினம்
11. ஆச்சர்யப்படுத்தும் ஜாதக ரகசியங்கள் - கட்டுரை
12. வாழ்வின் வெற்றி ரகசியங்கள் - கட்டுரை
13. நல்வழி காட்டும் நாராயண குருவின் வாழ்க்கை வரலாறு - சரிதை
14. நூலகங்களின் புரவலர் பொன் சுப்பையாவின் எடுத்துக்காட்டான வாழ்கை - சரிதை
15. ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் - புதினம்
16. தமிழே அமுதே - கவிதை தொகுப்பு
17. முல்லை தோட்டத்து வெண்ணிலா - புதினம்
18. நெஞ்சில் மலர்ந்த நேசம் - புதினம்
19. தாலிக்கு இத்தனை முடிச்சுக்களா ? - சிறுகதை தொகுப்பு
20. ஒரு எழுத்தாளரின் அமெரிக்கப் பயண அனுபவங்கள் (2009 வெளியீடு)
21. நல் வரம் தரும் திருப்பதி மற்றும் நவ திருப்பதிகள்
22. தமிழ் கடவுள் முருகனின் அற்புதங்கள்
23. அவள் இல்லாமல் ஒரு வாழ்க்கையா?
24. ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் அற்புதங்கள்
25. ஓர் எழுத்தாளரின் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அமெரிக்கப் பயண அனுபவங்கள் (2015 வெளியீடு)

குறிப்புகள் தொகு

 

  1. "Archived copy". Archived from the original on 2008-12-11. பார்க்கப்பட்ட நாள் 2009-04-01.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. Short story published recently in ஆனந்த விகடன் dated 1 Aug 2007 & 30 Jan 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்_அருணாசலம்&oldid=3743616" இலிருந்து மீள்விக்கப்பட்டது