பொய் தோற்ற சூரிய உதயம்
பொய் தோற்ற சூரிய உதயம் (False sunrise) என்பது வளிமண்டலத்தில் உண்டாகும் பல்வேறு ஒளியியல் நிகழ்வுகளில் ஒன்றாகும். இது சூரியன் அடிவானத்திற்கு மிகவும் கீழே இருக்கும் போதே நடைபெறுகிறது. பல்வேறு வளி மண்டல நிலைகளால் இந் நிகழ்வு ஏற்படுகிறது. சூரிய ஒளி, வளி மண்டல நிலைகளால் விலகலடைந்து பார்வையாளரை வந்தடைகிறது. சூரியனிலிருந்து நேரடியாக வருவது போல் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒளி பரவும் விதமும் உண்மையிலே சூரியனிலிருந்து வருவது போல் ஏமாற்றும் விதமாக உள்ளது.
பொய் தோற்ற சூரிய உதயத்தை ஏற்படுத்தும் பல்வேறு வளி மண்டல நிலைகள்
தொகு- மேகங்கள், சூரிய ஒளியை எதிரொளிப்பதன் மூலம் உருவாகலாம்.
- இது ஒரு வகையான பரி வேடம் ஆகும். மேல் தொடு வளைவு மற்றும் சூரிய தூண் போல் வளி மண்டலத்திலுள்ள பனித் துகள்களால், ஒளி எதிரொளிப்பு அல்லது ஒளி விலகல் மூலம் இவற்றை உருவாக்குகின்றன. வளிமண்டல வெப்பநிலைக்கும், பரி வேட நிகழ்விற்கும் தொடர்பில்லை என்பதால், இது ஆண்டு முழுதும் அனைத்து பருவநிலைகளிலும் நடைபெறும் ஒரு நிகழ்வாகும்.
- இது ஒரு கானல் நீர் காட்சியாகும். குறிப்பாக இது நோமியா செம்லியா விளைவு ஆகும். இது துருவங்களில் மட்டுமே நடைபெறும் நிகழ்வாகும். துருவ இரவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே அடி வானத்திற்கு மேலே சூரியன், நோமியா செம்லியாவால் கண்டறியப்பட்டது.[1] ஆரம்ப காலங்களில் ஐயுறவுக் கோட்பாடாக கொள்ளப்பட்டாலும், நவீன காலத்தில் இது உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்டது.[2]
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The Three Voyages of William Barents to the Arctic Regions, (1594, 1595, and ..." archive.org.
- ↑ Siebren van der Werf, Het Nova Zembla verschijnsel.