பொள்ளிலூர் போர் (1780)

பொள்ளிலூர் போர் (Battle of Pollilur), அல்லது புள்ளலூர் போர் அல்லது பேரம்பாக்கம் போர், இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போரின் அங்கமாக செப்டம்பர் 10, 1780இல் காஞ்சிபுரம் அடுத்துள்ள பொள்ளிலூரில் நடைபெற்ற போர் ஆகும். இது திப்பு சுல்தான் தலைமையேற்ற மைசூர் படைகளுக்கும் கர்னல் வில்லியம் பெய்லி தலைமையேற்ற பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனப் படைகளுக்கும் இடையே நடந்தது. பிரித்தானிய படை பேரிழப்புகளை சந்தித்ததுடன் சரணடைந்தது. துணைக்கண்டத்திலேயே அதுவரை பிரித்தானியர்கள் இந்தப் போரில்தான் மிகமோசமான தோல்வியை எதிர்கொண்டனர். (இதற்கு பின்னரே சிலியன்வாலாவில் இதைவிட மோசமானத் தோல்வியைத் தழுவினர்.)[4]

பொள்ளிலூர் போர்
இரண்டாவது ஆங்கிலேய-மைசூர் போர் பகுதி

போரின் விளக்கம்
நாள் 10 செப்டம்பர் 1780
இடம் புள்ளலூர், காஞ்சிபுரம்
மைசூர் வெற்றி
பிரிவினர்
மைசூர் அரசு  பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்
தளபதிகள், தலைவர்கள்
திப்பு சுல்தான்
சுல்தான் ஐதர் அலி
உவில்லியம் பெய்லி சரண்
பலம்
மொத்தம் 11,000[1] 3,853[2], 6,000 குதிரைப்படை, 12 இலகுரக துப்பாக்கிகள், 6 கனரக துப்பாக்கிகள்
இழப்புகள்
தெரியவில்லை 2,016 இறப்புகள்
1,000 கைப்பற்றப்படல்[3]

திப்பு குண்டூரில் கர்னல் பெய்லியை காஞ்சிபுரம் செல்லமுடியாது தடுத்திருக்க திப்புவின் தந்தை ஐதர்அலி ஆற்காட்டை தொடர்ந்து முற்றுகையிட்டார். படுகொலைக்குப் பிறகு பெய்லியின் தலைமையின் கீழிருந்த 3853 பிரித்தானியத் துருப்புகளில் 50 அதிகாரிகளும் 200 வீரர்களும் மட்டுமே சிறைபிடித்துச் செல்லப்பட்டனர். பெய்லி ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.[5]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Jaim, H M Iftekhar; Jaim, Jasmine (1 October 2011). "The Decisive Nature of the Indian War Rocket in the Anglo-Mysore Wars of the Eighteenth Century". Arms & Armour 8 (2): 131–138. doi:10.1179/174962611X13097916223244. "Captain Munro noted: 'Around two or three thousand horse and rocket-men kept hovering round our main army, in order to conceal his enterprise from us'.". 
  2. Tritton, Alan (2013). When the Tiger Fought the Thistle: The Tragedy of Colonel William Baillie of the Madras Army. Bloomsbury Publishing. ISBN 9780857722959. The Battle of Pollilur on 10 September 1780, fought as part of the Second Anglo-Mysore War, was one of the worst defeats the British ever suffered on the Indian subcontinent. It was fought between a Brigade Column of the East India Company, led by Colonel William Baillie, and the Mysore Army, under the command of Haidar Ali and Tipu Sultan. Heavily outnumbered and wounded in battle, Baillie was taken prisoner and eventually died isolated and in captivity in Seringapatam, in the state of Karnataka near Mysore, on 13 November 1782.{{cite book}}: CS1 maint: date and year (link)
  3. Jasanoff, Maya (2005). Edge of empire: lives, culture, and conquest in the East, 1750-1850 (1. ed.). New York: Knopf. p. 157. ISBN 1-4000-4167-8. Some three thousand Company soldiers were killed, while Baillie and two hundred Europeans, fifty of them officers, were carried off to Seringapatam in chains. The captives' sufferings became an emotive theme in British representations of Mysore, and one of the Pollilur captives, David Baird, would avenge the battle personally by leading the charge against Seringapatam in 1799.
  4. Ramaswami, N.S. (1984). Political History of Carnatic under the Nawabs. New Delhi: Abhinav Publications. pp. 225.
  5. Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. pp. 173–174. ISBN 9788131300343.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொள்ளிலூர்_போர்_(1780)&oldid=4257688" இலிருந்து மீள்விக்கப்பட்டது