போடமலை பெட்டா

தமிழ்நாட்டு மலை

போடமலை பெட்டா (Bodamalai Betta) என்பது 1,200 மீட்டர்கள் (3,937.0 அடி) உயரமுள்ள ஒரு மலையாகும். இது தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் மேட்டூர் அணையிலிருந்து 20 கிலோமீட்டர்கள் (12.4 mi) மேற்கில் உள்ளது.

நிலவியல் தொகு

மலை 1,200 மீட்டர்கள் (3,937.0 அடி) உயரமானதாகவும், கிழக்கு மேற்காக 10 km (6.2 mi), வடக்கு தெற்காக 7 km (4.3 mi) பரப்பளவைக் கொண்டதாகவும் உள்ளது. தெற்கில் பள்ளத்தாக்குகள் சூழப்பட்டு 600 மீட்டர்கள் (1,968.5 அடி) உயம் கொண்ட மலைகளாக உள்ளது. போடமலை பெட்டா பகுதி ஆறாம் நிலை நிலநடுக்க மண்டலத்தில் அமைந்துள்ளது, சராசரியாக 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரிக்டர் அளவுகோளில் 5-6 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது.[1][2]

மலையின் உச்ச வடக்கிலிருந்து 3 கிலோமீட்டர்கள் (1.9 mi) கிழக்கு மேற்கு பள்ளத்தாக்கில் காவிரி ஆற்றின் துணை ஆறான பாலாறு உள்ளது. ஆற்றின் ஊடாக உள்ளூர் சாலை ஒன்று செல்கிறது.[3][1]

இதன் அருகில் 18 கி.மீ (11 மைல்) தொலைவில் கர்நாடக மாநிலம், சாமராசநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னக் கோட்டை என்ற ஊர் உள்ளது.

காலநிலை தொகு

போடமலை பெட்டா ஒரு ஈரப்பத துணைவெப்பமண்டல தட்பவெப்பநிலை பகுதியில் உள்ளது. ஏப்ரல் மாதம் மதிய நேர சராசரி வெப்பம் 91.76 ° F (° 33.20 ° சி) ஆக மிக வெப்பதான மாதமாக இருக்கும். சனவரி மாதங்களில் இரவு நேர வெப்பநிலை 59.18 ° F (° 15.10 ° சி) என நிலவும், பெப்ரவரி மாத இரவுநேர வெப்பநிலை மிகவும் குறைந்து காணப்படும். அக்டோபர் மாதத்தை ஒட்டி மழைக்காலம் ஆகும். சனவரி மாதம் வறண்ட மாதமாகும்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Bodamalai Betta: India, Bethesda, Maryland, USA: National Geospatial-Intelligence Agency, retrieved 2011-01-20 
  2. 2.0 2.1 Bodamalai Betta (mountain) பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், retrieved 2012-02-24 
  3. "29.6 km WxNW of Mettur", ACME Mapper 2.0, ACME Laboratories, Tele Atlas, retrieved 2011-01-20 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போடமலை_பெட்டா&oldid=3767386" இலிருந்து மீள்விக்கப்பட்டது