போட்டி (உயிரியல்)

போட்டி (competition) என்பது இரண்டு உயிரினம் அல்லது இனங்கள் பாதிக்கப்படும் போது அவைகளுக்கிடையே நிகழும் இடைவினையாகும். இரு உயிரினம் பயன்படுத்தும் ஏதாவது ஒரு வளத்தில் (உணவு, நீர், இருப்பிடம் அல்லது எல்லைகள்) பற்றாக்குறை ஏற்படுதலே இப்போட்டி ஏற்படுவதற்கான முக்கியக் காரணியாகும்..[1] போட்டியானது ஒரே இனத்துக்குள்ளோ அல்லது இரு இனங்களுக்கிடையிலோ சூழலியலில் குறிப்பாக சமூக சூழலியலில் முக்கியமாக நிகழக்கூடும். சமுதாய கட்டமைப்பைப் பாதிக்கும் பல சிக்கலான, உயிரோட்டமான மற்றும் அபாயகரமான காரணிகளில் இதுவும் ஒன்றாகும். அதே இனத்தின் உறுப்பினர்கள் மத்தியில் போட்டியிடுவது சிற்றினத்தமக்கிடை போட்டி (intraspecific competition) என அழைக்கப்படுகிறது. பல்வேறு இனங்களின் தனி உயிரிகளுக்கிடையேயான போட்டி இனங்களிடைப் போட்டியாக (interspecific competition) அறியப்படுகிறது. போட்டியானது எப்போதும் வெளிப்படையாக நிகழ்வதில்லை; மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ இருக்கக்கூடும்.[2]

கடற்கரையோர ஓடக் குட்டையில் கடல் சாமந்திகளுக்கிடையே இருப்பிடத்தை ஆக்கிரமித்துக்கொள்வதில் போட்டி

மேற்கோள்கள்தொகு

  1. Begon, M.; Harper, J. L.; Townsend, C. R. (1996) Ecology: Individuals, populations and communities Blackwell Science.
  2. Sahney, S.; Benton, M.J.; Ferry, P.A. (2010). "Links between global taxonomic diversity, ecological diversity and the expansion of vertebrates on land". Biology Letters 6 (4): 544–547. doi:10.1098/rsbl.2009.1024. பப்மெட்:20106856. பப்மெட் சென்ட்ரல்:2936204. http://rsbl.royalsocietypublishing.org/content/6/4/544.full.pdf+html. 

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போட்டி_(உயிரியல்)&oldid=3371638" இருந்து மீள்விக்கப்பட்டது