போன்பிபி
போன்பிபி (Bonbibi) என்பவர் காடுகளின் பாதுகாவலர் என்று அழைக்கப்படும் ஒரு புகழ்பெற்ற பெண்மணி. சுந்தரவனக் காடுகளின் (தெற்கு வங்காளதேசம் மற்றும் கிழக்கு இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் வங்காள விரிகுடாவிற்கு வடக்கே பரவி, வங்காளப் புலிகளின் தாயகமாக இருக்கும் உலகின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடு) இந்து, முஸ்லிம் மக்களால் போற்றப்படுகிறார்.[1] புலிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்புக்காகக் காட்டுக்குள் நுழைவதற்கு முன்பு, தேன் சேகரிப்பாளர்கள், மரம் வெட்டுபவர்கள் பெரும்பாலும் இவரை வணங்கிச் செல்வார்கள். போன்பிபியின் பரம எதிரியான அரக்க மன்னன் தக்கின் ராய் (தெற்கின் இறைவன்), உண்மையில் புலி வேடத்தில் தோன்றி மனிதர்களைத் தாக்குகிறான் என்று நம்பப்பட்டது.

கதைகள்
தொகுபோன்பிபியின் விவரிப்புகள் போன்பிபிர் கெரமதி (போன்பிபியின் மந்திரச் செயல்கள்) அல்லது போன்பிபிர் ஜஹுரனாமா (போன்பிபிக்கு மகிமை) என்று பெயரிடப்பட்ட பல நூல்களில் காணப்படுகின்றன. இதன் ஆரம்பக்காலக் கவிஞர்களில், பயனுதீன் மற்றும் முன்சி முகமது காதர் ஆகியோர் நன்கு அறியப்பட்டவர்கள். மேலும் துவிபோடி-போயர் (இரண்டு-அடி) என்று அழைக்கப்படும் பெங்காலி வசன அளவில் அவர்களின் நூல்கள் கிட்டத்தட்ட ஒத்தவை. பாரசீக மற்றும் குர்ஆனிய அரபியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.[2] இந்த நூல்கள் இரண்டு முக்கிய அத்தியாயங்களைக் கொண்டிருக்கின்றன. தாக்கின் ராயுடன் இவளுடைய போர் மற்றும் துக்கேவின் கதை இந்த அத்தியாயங்கள் ஆகும்.
2004ஆம் ஆண்டு தனது சுற்றுச்சூழல் நாவலான தி ஹங்கிரி டைடில், அமிதவ் கோசு, "துகேயின் மீட்பு" என்ற போன்பிபி கதையின் இரண்டு பகுதிகளில் குறிப்பிட்டுள்ளார். நெருப்பு நதியில், குர்ரத்-உல்-ஐன் ஐதர் ஓர் அடிக்குறிப்பில் "பான்-பிபி" என்பது முகமதுவின் மகள் பாத்திமா என்றும், அவர் வங்காளத்தின் காடுகளில் வசிக்கும் முஸ்லிம்களால் காடுகளின் புரவலராக மதிக்கப்படுகிறார் என்றும் குறிப்பிடுகிறார்.
உருவப்படவியல்
தொகுபோன்பிபியை பின்பற்றும் இந்துக்கள் பந்துர்கா, பந்தேவி அல்லது போன்பீபி என்று வணங்குகிறார்கள். மேலும் இவரது பிரதான இந்து உருவங்கள் கிரீடம் மற்றும் மாலை அணிந்திருப்பதுடன், கையில் தடி மற்றும் திரிசூலம் ஏந்தியிருக்கும். இவரது வாகனம் புலியாகக் காணப்படுகிறது. இவர் தனது முஸ்லிம் சீடர்களால் போன்பீபி என்று போற்றப்படுகிறார். மேலும் இவர் ஒரு பிராணி என்று அழைக்கப்படுகிறார். இவரது பெரும்பான்மையான முஸ்லிம் படங்கள் சடை முடியுடன், டிக்லியுடன் கூடிய தொப்பியை அணிந்த நிலையில் காணப்படுகின்றன. இவர் காக்ரா மற்றும் பைஜாமாவுடன் (சேலைக்குப் பதிலாக) ஓரிணைக் காலணிகளை அணிந்திருக்கிறார். இந்து மற்றும் முஸ்லிம் உருவங்கள் இரண்டிலும் அவர் மடியில் ஓர் ஆண் குழந்தை உள்ளது. [3] அவரை வழிபடுபவர்களால் துக்கே என்று நம்பப்படுகிறது. இவருடைய வாகனம் புலி அல்லது கோழி.[4]
போன்பிபியின் ஆலயங்கள்
தொகுசுந்தரவன காடுகளில் உள்ள போன்பீபியின் பெரும்பாலான ஆலயங்களில், போன்பீபி தனது சகோதரர் சா ஜங்காலி மற்றும் தாக்கின் ராய் ஆகியோருடன் வழிபடப்படுகிறார்.[1]
இலக்கியத்தில் தோன்றல்கள்
தொகுபோன்பிபியின் கதை அமிதவ் கோசின் தி ஹங்கிரி டைட், ஜங்கிள் நாமா ஆகியவற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இதே ஆசிரியரின் தி கிரேட் டிரேஞ்ச்மென்ட்: க்ளைமேட் சேஞ்ச் அண்ட் தி அன்திங்கபிள் ஆகியவற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.[5][6][7]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Sufia Uddin (2011). "Beyond National Borders and Religious Boundaries: Muslim and Hindu Veneration of Bonbibi". In Mathew N. Schmalz; Peter Gottschalk (eds.). Engaging South Asian Religions: Boundaries, Appropriations, and Resistances. New York: State University of New York Press. pp. 61–82. ISBN 978-1-4384-3323-3.
- ↑ Sen, Sukumar (1993). Islami Bangla Sahitya (in Bengali), Kolkata: Ananda Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7215-301-5, pp.73–82
- ↑ Banerjee, Manini (10 February 2008). "Trouble in tide country". The Telegraph. Archived from the original on 6 July 2008. Retrieved 11 January 2009.
- ↑ Basu, Gopendrakrishna (2008) [1966]. Banglar Laukik Debata (in Bengali), Kolkata: Dey's Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7612-296-3, pp.29–34
- ↑ Amitav Ghosh, The Hungry Tide. A Novel (New York: Houghton Mifflin Harcourt, 2005).
- ↑ Amitav Ghosh, The Great Derangement: Climate Change and the Unthinkable (London: Penguin, 2016), 28-29.
- ↑ Yadav Sumati, 'The Hungry Tide: Climate Sustainability en Route from Ancient Texts to Modern Fiction to Humanity', Caesura 2.1 (2015), 31-54.
மேலும் படிக்க
தொகு- Jalais, Annu (2014). Forest of Tigers: People, Politics and Environment in the Sundarbans. Routledge. ISBN 978-1-136-19869-4.