போயிசு (அலகு)

போயிசு அல்லது புவாசு (poise, குறியீடு P; /pɔɪz, pwɑːz/) என்பது இயங்கு பிசுக்குமையின் (தனிமானப் பிசுக்குமை) அலகாகும். இது செமீ–கி–செக் அலகுத்திட்டத்தில் தரப்படுகிறது.[1] இவ்வலகு சான் லியனார்டு மரீ புவசெல் என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்டது.

அனைத்துலக முறை அலகில் (எஸ்-ஐ) இது பிசுக்குமை (Pa⋅s):[2]

போயிசு பொதுவாக மெட்ரிக்கு முன்னொட்டான செண்டி- (centi-) உடன் கூறப்படுகிறது. ஏனெனில், நீரின் பிசுக்குமை 20 °செ இல் (NTP) 1 சென்Dஇபோயிசு ஆகும்.[3] ஒரு செண்டிபோயிசு நூறில் ஒரு போயிசு ஆகும், அல்லது எஸ்.ஐ அலகில் ஒரு மில்லிபாசுக்கல்-செக் (mPa⋅s) (1 cP = 10−3 Pa⋅s = 1 mPa⋅s).[4]

செண்டிபோயிசின் CGS குறியீடு cP. இது சில வேளைகளில் cps, cp, cPs எனவும் எழுதப்படுகிறது.

திரவ நீரின் பிசுக்குமை 0.00890 P (25 °செ, அழுத்தம் 1 வம (0.00890 P = 0.890 cP = 0.890 mPa⋅s).[5]

மேற்கோள்கள்தொகு

  1. Gooch, Jan W. (2010). Encyclopedia dictionary of polymers. (2nd ). Berlin: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4419-6246-1. 
  2. Reid, Robert C. (1987). The Properties of Gases and Liquids. (4th ). McGraw-Hill. 
  3. Parker, Sybil P. (1988). Fluid Mechanics Source Book. (1st ). McGraw-Hill. 
  4. Lide, David R. (1994). CRC Handbook of Thermophysical and Thermochemical Data. (1st ). CRC Press. 
  5. "Viscosity of Liquids", in CRC Handbook of Chemistry and Physics, 91st Edition, W.M. Haynes, ed., CRC Press/Taylor and Francis, Boca Raton, Florida, 2010-2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போயிசு_(அலகு)&oldid=2550825" இருந்து மீள்விக்கப்பட்டது