போர்கங்கை ஆறு
போர்கங்கை ஆறு (Borgang River) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றின் துணை ஆறு ஆகும். போர்கங்கை ஆறு அருணாச்சல பிரதேசத்தின் டாப்லா மலையிலிருந்து உருவாகிறது. டாப்லா மலைகள் வழியாகப் பாய்ந்த பிறகு, இந்த ஆறு பிரம்மபுத்திரா ஆற்றுடன் சங்கமிப்பதற்கு முன்பு இதன் துணை ஆறான நவோமாரா மற்றும் திகல் ஆகியவற்றைப் பெறுகிறது. சமீபகாலமாக போர்கங்கை பகுதியில் ஆற்றின் கரையோரத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது.[1][2]
போர்கங்கை ஆறு Borgang River | |
---|---|
அமைவு | |
மாநிலம் | அசாம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | தாப்ளா மலைகள் |
⁃ அமைவு | அருணாசலப் பிரதேசம் |
முகத்துவாரம் | பிரம்மபுத்திரா ஆறு |
⁃ அமைவு | பிதியா மாரி, சோணித்பூர் மாவட்டம், அசாம் |
⁃ ஆள்கூறுகள் | 26°45′08.4″N 93°19′09.0″E / 26.752333°N 93.319167°E |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
பாயும் வழி | பிரம்மபுத்திரா ஆறு |