போர் சீசன்சு ஓட்டல், மும்பை
போர் சீசன் ஹோட்டல், மும்பை (Four Seasons Hotel, Mumbai) ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலாகும். இது ரொறன்ரோடோரன்டோவினை அடிப்படையாகக் கொண்ட ஃபோர் சீசன் ஆடம்பர விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு தங்குமிடங்களின் ஒரு பிரிவாகும்.[4] மும்பையின் வளர்ந்துவரும் முக்கிய நகரங்களுள் ஒன்றான வோர்லியில் இது அமைந்துள்ளது.[5] இதில் தற்போது 202 விருந்தினர் அறைகளும்,[6] இந்தியாவின் மிகவும் உயரமான மேல்மாடி அருந்தகமும் கொண்டுள்ளது. இதனை லோஹன் அசோசியேட்ஸின் ஜான் அர்சாரியன் வடிவமைத்து கட்டினார்.[7][8][9][10]
போர் சீசன்சு ஓட்டல், மும்பை | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
இடம் | 144 டாக்டர். ஈ மோசஸ் தெரு, வொர்லி, மும்பை, இந்தியா[1] |
நிறைவுற்றது | 2008 |
திறப்பு | 2008 |
செலவு | US$100 மில்லியன்[3] |
உயரம் | |
கூரை | 146 m (479 அடி)[2] |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 37 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | ஜான் அர்சாரியன், லோகன் அசோசியேட்ஸ் |
வரலாறு
தொகு37 மாடிகளைக் கொண்ட ஃபோர் சீசன் ஹோட்டல் 2008 [11] ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இதன் வடிவமைப்பினை ஹாங்காங்கினை அடிப்படையாகக் கொண்ட நிறுவனமான லோகன் அசோசியேட்சின் சார்பில் ஜான் அர்சாரியன் செய்தார். ஹோட்டலின் உள்வடிவமைப்பினை பில்கே லினாஸ் வடிவமைத்துள்ளர்.[12] சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இதன் கட்டிட வேலைகள் நடைபெற்றது. மேலும் இந்தியாவில் 37 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தினை மிக விரைவாக கட்டிமுடித்த பெருமை இந்த ஹோட்டலுக்குள்ளது. இதன் 37 மாடிகளை கட்டிமுடிக்க ஒரு வருடத்திற்கும் குறைவான கால அளவே செலவானது. இதன் மேலாண்மைப் பணிகளை சஞ்சீவ் கார்க் பார்த்துக்கொண்டார். சஞ்சீவ் கார்க், புது தில்லியினை அடிப்படையாகக் கொண்ட நிறுவனமான, அஹ்லுவாலியாவின் ஒப்பந்தங்கள் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆவார். இதனை கட்டிமுடிக்க அமெரிக்க மதிப்பின்படி சுமார் 100 மில்லியன் டாலர்கள் செலவானது
இருப்பிடம்
தொகுபோர் சீசன் ஹோட்டல் மும்பை, வோர்லியில் உள்ள டாக்டர். ஈ. மோசஸ் சாலையில் உள்ளது. இந்த நகரம் மும்பையின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கும் நகரங்களில் ஒன்றாகும்.[13] இங்கிருந்து நரிமன் பாயிண்ட் மற்றும் பான்ட்ரா குர்லா காம்பளக்ஸ் போன்ற இடங்களுக்கு சுமார் 7 கிலோ மீட்டர் மற்றும் 8 கிலோ மீட்டர் பயணத்தின் மூலம் சென்றடையலாம். சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் இந்த ஹோட்டலில் இருந்து ஏறக்குறைய 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ "Mumbai Hotel Rates | Hotel Packages | Room Reservations | Four Seasons Mumbai". Fourseasons.com. பார்க்கப்பட்ட நாள் 2010-09-15.
- ↑ Emporis GmbH. "Four Seasons Mumbai, Mumbai, India". Emporis.com. பார்க்கப்பட்ட நாள் 2010-09-15.
- ↑ "Riches rise from Mumbai slum clearance". Rediff.com. 2004-12-31. பார்க்கப்பட்ட நாள் 2010-09-15.
- ↑ "Four Seasons Hotels coming to Mumbai". The Hindu Business Line. 2010-09-15.
- ↑ "The most comfortable bed in town - Insider". livemint.com. 2008-02-22. பார்க்கப்பட்ட நாள் 2010-09-15.
- ↑ "Four Seasons to add six more properties". Business-standard.com. 2009-06-23. பார்க்கப்பட்ட நாள் 2010-09-15.
- ↑ "Introducing Aer, India's Highest Rooftop Bar". Press.fourseasons.com. 2009-12-03. பார்க்கப்பட்ட நாள் 2010-09-15.
- ↑ "View from the top - Insider". Press.fourseasons.com. 2009-12-04. பார்க்கப்பட்ட நாள் 2010-09-15.
- ↑ "View from the top - Insider". Press.fourseasons.com. 2009-12-04. பார்க்கப்பட்ட நாள் 2010-09-15.
- ↑ "Four Seasons Hotel Mumbai opens breathtaking Aer bar". Easier. 2009-12-07. பார்க்கப்பட்ட நாள் 2010-09-15.
- ↑ "Four Seasons Mumbai, Mumbai, India". Emporis.com. பார்க்கப்பட்ட நாள் 2010-09-15.
{{cite web}}
:|first=
missing|last=
(help) - ↑ "Four Seasons Hotel opens in Mumbai - Construction & Industry". ArabianBusiness.com. 2008-06-29. பார்க்கப்பட்ட நாள் 2010-09-15.
- ↑ "Four Seasons Hotel Mumbai". cleartrip.com.