போலாரிசு

வடக்கு வானில் காணப்படும் பிரகாசமான துருவ நட்சத்திரம்

போலாரிசு என்பது வடக்கு வானில் காணப்படும் பிரகாசமான துருவ நட்சத்திரம் ஆகும். இது ஆல்பா உர்சா மைனாரிசு எனவும் வழிகாட்டும் விண்மீன் எனவும் அழைக்கப்படுகிறது. 431 ஒளிஆண்டுகள் தொலைவிலுள்ள போலாரிஸ்[1] மஞ்சள் நிறங்கொண்ட நிற மாலையால் F வகையைச் சேர்ந்த மாபெரும் விண்மீனாகும். இதன் புறப்பரப்பு வெப்ப நிலை 7000 டிகிரி செல்சியஸ், அதாவது பூமி அமைந்துள்ள சூரியக் குடும்பத்தின் சூரியனை விட வெப்பமிக்கது. இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 1.99. சார்பிலா ஒளிப்பொலிவெண் 3.64. அதாவது இதன் ஒளிர்திறன் சூரியனைப் போல 2200 மடங்கு அதிகமாகும். பூமியின் சுழலச்சில் ஏற்படும் தள்ளாட்டத்தின் காரணமாக துருவம் இடம் பெயர்வதால் போலாரிசின் இருப்பிடமும் மாறுகிறது. நெருக்கமாக இருக்கும் போது 0.46 டிகிரி கோண விலக்கத்துடன் இருக்கும்.

மேற்கோள் தொகு

  1. எஆசு:10.1086/338583
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலாரிசு&oldid=3596323" இலிருந்து மீள்விக்கப்பட்டது