பௌத்த தத்துவங்களும் தியான முறைகளும் (புத்தகம்)

பௌத்த தத்துவங்களும் தியான முறைகளும் என்பது ஓ. ரா. நா. கிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்டு மதுரை காந்த அருங்காட்சிய வளாகத்தில் உள்ள அகிம்சை பென்னிய பெட்சி நிறுவனம் வெளியிட்ட ஒரு புத்தகம் ஆகும். இந் நூலுக்கு பிக்கு டாக்டர் போதிபால சுவாமிகள் அணிந்துரை வழங்கியுள்ளார். இந்நூலை ஆசிரியர் தமிழ்த்தாயின் பொன்னடிகளுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். புத்தரின் வரலாறு, தம்மம், உன்னத நான்கு உண்மைகள் உள்ளிட்ட பதினைந்து அத்தியாயங்களை இந்நூல் கொண்டுள்ளது. அத்தோடு அட்டவணை வடிவில் பாலி - வடமொழி - ஆங்கிலம் - தமிழ் அருஞ்சொற்களும் இணைக்கப்பட்டுள்ளன.

பௌத்த தத்துவங்களும் தியான முறைகளும்
நூலாசிரியர்ஓ. ரா. நா. கிருஷ்ணன்
உண்மையான தலைப்புபௌத்த தத்துவங்களும் தியான முறைகளும்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பொருண்மைபௌத்தம், தியானம், யோகம், தத்துவம்
வெளியீட்டாளர்அகிம்சை பென்னிய பெட்சி நிறுவனம்
பக்கங்கள்275