ப்ரே லார்சன்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ப்ரீ லார்சன் (Brie Larson, பிறப்பு: அக்டோபர் 1, 1989) ஒரு அமெரிக்க நடிகையாவார். இவர் தனது இளம் வயதிலிருந்து திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் அகாதமி விருது மற்றும் கோல்டன் குளோப் விருது போன்ற விருதுகளை வென்றார். 2019ஆம் ஆண்டு டைம் என்ற நாளிதழில் உலகின் 100 மிகவும் செல்வாக்காளர்களில் ஒருவராக இவரை அறிவித்தது.
ப்ரீ லார்சன் | |
---|---|
![]() | |
பிறப்பு | பிரியன்னே சிடோனி டௌல்நெய்ர்ஸ் அக்டோபர் 1, 1989 சேக்ரமெண்டோ அமெரிக்கா |
இருப்பிடம் | லாஸ் ஏஞ்சலஸ் கலிபோர்னியா அமெரிக்கா |
கல்வி | அமெரிக்கன் கன்சர்வேட்டரி தியேட்டர் |
பணி | நடிகை திரைப்பட தயாரிப்பாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1998–அறிமுகம் |
துணைவர் | அலெக்ஸ் கிரீன்வால்ட் (2013–2019) |
இவர் தனது 6 வயதிலிருந்து அமெரிக்கன் கன்சர்வேட்டரி நாடக பள்ளியில் பயிற்சி பெற்றார். 1998ஆம் ஆண்டு முதல் முதலில் நடிப்பு துறையில் அறிமுகமானார். 2001ஆம் ஆண்டு ரைசிங் டாட் என்ற தொலைக்காட்சி தொடரிலும், 2006ஆம் ஆண்டு ஹூட் என்ற நகைச்சுவை திரைப்படத்தில் துணை நடிகையாகவும், 2012ஆம் ஆண்டு 21 ஜம்ப் ஸ்ட்ரீட் என்ற திரைப்படத்திலும் நடித்தார். 2009ஆம் ஆண்டு முதல் 2011 வரை 'அமெரிக்காவின் தாரா' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார்.
2015ஆம் ஆண்டு ரூம் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான அகாதமி விருதை வென்றார். இவர் முதல் முதலில் பெரும் செலவில் எடுக்கப்பட்ட காங்: ஸ்கல் தீவு என்ற சாகசத் திரைப்படத்தில் நடித்தார் இத் திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளியானது. இவர் கேப்டன் மார்வெல் (2019) என்ற திரைப்படத்தில் மார்வெல் வரைக்கதை கதாபாத்திரமான கரோல் டானர்ஸ் என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[1] இதை தொடர்ந்து அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.[2][3]
மேற்கோள்கள்தொகு
- ↑ Breznican, Anthony (April 7, 2019). "Everything you need to know from the Avengers: Endgame press conference". Entertainment Weekly. https://ew.com/movies/2019/04/07/everything-you-need-know-avengers-endgame-press-event/. பார்த்த நாள்: April 8, 2019.
- ↑ Zacharek, Stephanie (March 5, 2019). "Review: Brie Larson Makes a Fine Captain Marvel – But What Does It Accomplish?". Time. http://time.com/5543991/captain-marvel-review/. பார்த்த நாள்: March 5, 2019.
- ↑ Sims, David (March 5, 2019). "The Greatest Strength of Captain Marvel Is Also Its Biggest Weakness". The Atlantic. https://www.theatlantic.com/entertainment/archive/2019/03/captain-marvel-review-brie-larson-anna-boden-ryan-fleck/584125/. பார்த்த நாள்: March 5, 2019.