மகாத்மா: லைஃப் ஆஃப் காந்தி, 1869–1948
மகாத்மா: லைஃப் ஆஃப் காந்தி, 1869–1948 (Mahatma: Life of Gandhi, 1869–1948 [1]) என்பது மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் 1968 ஆண்டைய விபரணப்படமாகும். இந்தப் படமானது இந்திய அரசின் திரைப்படப் பிரிவின் ஒத்துழைப்போடு, காந்தி தேசிய நினைவு நிதியில் தயாரிக்கப்படது. இப்படத்தை திரைக்கதை எழுதி இயக்கியவர் வித்தல்பாய் ஜவேரி ஆவார்.[2] மேலும் இப்படத்தில் இடம்பெற்ற வர்ணனையானது ஜவேரியால் செய்யப்பட்டது. கருப்பு, வெள்ளையில் எடுக்கப்பட்ட இப்படமானது, 33 சுருள்களோடு (14 அத்தியாயங்கள்), 330 நிமிட கால அளவைக் கொண்டுள்ளது.
மகாத்மா: லைஃப் ஆஃப் காந்தி, 1869–1948 Mahatma: Life of Gandhi, 1869–1948 | |
---|---|
இயக்கம் | வித்தல்பாய் ஜவேரி |
தயாரிப்பு | காந்தி தேசிய நினைவு நிதி இந்திய திரைப்படப் பிரிவு |
கதை | வித்தல்பாய் ஜவேரி |
ஓட்டம் | 330 நிமிடம் |
நாடு | இந்தியா |
மொழி | ஆங்கிலம் |
இப்படமானது காந்தியின் வாழ்க்கை வரலாற்றையும், சத்தியத்திற்கான அவரது இடைவிடாத தேடலைக் காட்டும் விதமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இயங்குபடம், அசல் ஒளிப்படங்கள், பழைய அச்சுப் பிரதிகள் போன்றவற்றை உள்ளடக்கி காந்தியின் வாழ்க்கையைக் காட்டுகிறது. இந்த கதையானது பெரும்பாலும் காந்தியின் சொந்த சொற்களைப் பயன்படுத்தி விவரிக்கப்பட்டுள்ளது.
இப்படமானது பல பதிப்புகளைக் கொண்டதாக உள்ளது. ஆங்கிலத்தில் 5 மணிநேரம் கொண்ட விரிவான பதிப்பும், 2 மணி 16 நிமிடங்கள் கொண்ட இடைநிலைப் பதிப்பும், ஒரு மணிநேரம் கொண்ட சிறு பதிப்புகளாகவும் உள்ளது. இதன் இந்தி பதிப்பானது 2 மணி 20 நிமிடங்களிலும், ஜேர்மன் பதிப்பானது1 மணி 44 நிமிடங்களுடன் உள்ளது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Mahatma: Life of Gandhi, 1869–1948 (1968 - 5hrs 10min)". பார்க்கப்பட்ட நாள் 30 December 2014.
- ↑ "Vithalbhai Jhaveri". Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 30 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- Mahatma Gandhi : Film : MAHATMA - Life of Gandhi, 1869-1948 (5hrs 10min) Channel of GandhiServe Foundation
- Mahatma: Life of Gandhi 1869 - 1948 streams and commentaries - Offers various versions of the movie for free online viewing and written commentaries on the film.
- Vithalbhai K. Javeri & D.G. Tendulkar, 1953