மகாலிங்கேசுவரர் கோயில், அடூர்

மகாலிங்கேசுவரர் கோயில் (Mahalingeshwara Temple) என்பது கேரளத்தின், காசர்கோடு மாவட்டதில் அடூர் என்ற ஊரில் உள்ள ஒரு பழமையான சிவன் கோயில் ஆகும். இருந்த கோயிலானது காசர்கோடு நகரில் இருந்து 45 கி.மீ. தொலைவில், பயசுவினி ஆற்றின் தென் கரையில் பசுமையான சூழலில் அமைந்துள்ளது.

வரலாறு தொகு

இந்தக் கோயிலானது மிகப் பழமையானது என்பதற்கு சான்றாக கல்வெட்டுகள் உள்ளன. இங்கு கன்னட வரிவடிவத்தில் எழுதப்பட்ட கி.பி. 745-755 ஆண்டைய சமுசுகிருத கல்வெட்டானது சாளுக்கிய மன்னனான இரண்டாம் கீர்த்திவர்மனை புகழ்வதாக உள்ளது.[1]

விழாக்கள் தொகு

மகர சங்கரம் என்பது இங்கு நடைபெறும் ஒரு முக்கியமான விழா ஆகும். அடூர் கோயிலில் துவங்கும் இந்த திருவிழா ஆற்றில் புனித நீராடி பந்தி விருந்துடன் முடிவடைகிறது. இது கும்பாபிசேகம் என்று அழைக்கபடுகிறது.[2]

போக்குவரத்து தொகு

அருகில் உள்ள தொடருந்து நிலையமான அடூர் தொடருந்து நிலையமானது காசர்கோட்டில் இருந்து 82 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அருகிலுள்ள வானூர்தி நிலையமானது கர்நாடகத்தில் உள்ள மங்களூர் வானூர்தி நிலையம் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. கேரளா ஒரு சுற்றுலா பார்வை, நூல், வி.கே.டி. பாலன், பக்கம்141, மதுரா வெளியீடு, 2005 திசம்பர்.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-07-24. பார்க்கப்பட்ட நாள் 2020-08-01.