மகாஸ்தங்கர்


மகாஸ்தங்கர் (Mahasthangarh) (வங்காள மொழி: মহাস্থানগড় கிமு 260-இல் அசோகர் நிறுவிய கல்வெட்டுக்கள் கொண்ட பௌத்த தொல்லியல் களம், வங்காளதேசம் நாட்டின் ராஜசாகி கோட்டம், போக்ரா மாவட்டத்தில் உள்ள மகாஸ்தங்கர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.[1][2][3] மகாஸ்தங்கர் கிராமத்தில் பேரரசர் அசோகர் பிராகிருத மொழியில் பிராமி எழுத்தில் 6 வரிகளில் பொறித்த சுண்ணாம்புக் கற்பலகை கல்வெட்டு உள்ளது. 1931-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட் இக்கல்வெட்டில் அசோகர் நிலம் தானமாக கொடுத்தது பற்றி குறித்துள்ளது.[4][5]

மகாஸ்தங்கர்
মহাস্থানগড়
மகாஸ்தங்கர் அரண்மனைக் கோட்டை
மகாஸ்தங்கர் is located in வங்காளதேசம்
மகாஸ்தங்கர்
Shown within Bangladesh#South Asia
மகாஸ்தங்கர் is located in South Asia
மகாஸ்தங்கர்
மகாஸ்தங்கர் (South Asia)
இருப்பிடம்மகாஸ்தங்கர், போக்ரா மாவட்டம், ராஜசாகி கோட்டம், வங்காளதேசம்
ஆயத்தொலைகள்24°57′40″N 89°20′34″E / 24.96111°N 89.34278°E / 24.96111; 89.34278
வகைகுடியிருப்பு பகுதி
வரலாறு
கட்டப்பட்டதுகிமு 3-ஆம் நூற்றாண்டு
பயனற்றுப்போனதுகிபி எட்ட்டாம் நூற்றாண்டு

அகழாய்வு தொகு

மகாஸ்தங்கர் தொல்லியல் களம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முதன்முதலில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியல் ஆய்வாளர் கே. என். தீட்சித் தலைமையில் 1928-29-ஆம் ஆண்டுகளில் அகழாய்வு செய்யப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் தொகு

 
நிலம் தானமாக கொடுக்கப்பட்ட விவரத்தைக் கூறும் அசோகரின் பிராமிக் கல்வெட்டு[4]
 
கௌதம புத்தர் சிற்பம்

1931-இல் மகாஸ்தங்கர் தொல்லியல் கள அகழாய்வின் போது பேரரசர் அசோகர் (கிமு 260-இல்) பிராகிருத மொழியில் பிராமி எழுத்தில் 6 வரிகளில் பொறித்த 4.4 செமீ x 5.7 செமீ அளவு கொண்ட சுண்ணாம்புக் கற்பலகை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டில், மகாஸ்தங்கர் கிராம விளைநிலங்கள் தானமாக வழங்கப்பட்ட விவரம் உள்ளது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Hossain, Md. Mosharraf (2006). "Preface". Mahasthan: Anecdote to History. Dhaka: Dibyaprakash. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-984-483-245-9. 
  2. Brochure: Mahasthan – the earliest city-site of Bangladesh, published by the Department of Archaeology, Ministry of Cultural Affairs, Government of the People’s Republic of Bangladesh, 2003
  3. R. C. Majumdar (2005). History of Ancient Bengal. Kolkata: Tulshi Prakashani. பக். 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-89118-01-3. 
  4. 4.0 4.1 Sastri, Hirananda (1931). Epigraphia Indica vol.21. பக். 83–89. https://archive.org/details/in.gov.ignca.9580. 
  5. Hossain, Md. Mosharraf, pp. 56–60.

வெள் இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாஸ்தங்கர்&oldid=3307026" இலிருந்து மீள்விக்கப்பட்டது