மகா சிவகுப்தன் பாலார்ச்சுனன்

தெற்கு கோசலத்தின் பாண்டுவம்சி வம்ச மன்னர்

மகா சிவகுப்தன் பாலார்ச்சுனன் (Maha-Shivagupta Balarjuna) அல்லது சிவகுப்தன், தெற்கு கோசலத்தின் பாண்டுவம்சி வம்சத்தின் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ், சிர்பூர் கலாச்சார மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் நம்பமுடியாத வளர்ச்சியைக் கண்டது.[1]

மகா சிவகுப்தன் பாலார்ச்சுனன்
மகாராசா
தெற்கு கோசலத்தின் பாண்டுவம்சிகள் வம்சத்தின் கடைசியாக அறியப்பட்ட மற்றும் மிகவும் சக்திவாய்ந்த மன்ன்னர்
ஆட்சிக்காலம்சுமார் 730-790 பொ.ச.
முன்னையவர்ஹர்ஷகுப்தன்
பின்னையவர்இவரது மகன் சிவானந்தினாக இருக்கலாம்
குழந்தைகளின்
பெயர்கள்
சிவானந்தின்
தந்தைஹர்ஷகுப்தன்
தாய்வசதா
மதம்சைவ சமயம் (இந்து சமயம்)

பெயர்

தொகு

இவரது சொந்த செப்புத் தகடு கல்வெட்டுகள் இவரை மகா-சிவகுப்தன் என்று அழைக்கின்றன. மேலும் இந்த கல்வெட்டுகளின் முத்திரைகள் இவரை சிவகுப்தன் என்றும் அழைக்கின்றன; இவரது ஆட்சியின் போது வெளியிடப்பட்ட மற்ற கல்வெட்டுகள் பொதுவாக இவரை சிவகுப்தன் அல்லது பாலார்ச்சுனன் என்று அழைக்கின்றன. ஒரு கல்வெட்டு இவரை மகா-சிவகுப்தன் என்று அழைக்கிறது.[2] பாலார்ச்சுனன் என்பது இவரது தனிப்பட்ட பெயராகவும், மகாசிவகுப்தன் என்பது இவரது முடிசூட்டுப் பெயராகவும் இருக்கலாம்.[3]

சொந்த வாழ்க்கை

தொகு

பாலார்ச்சுனன் ஹர்ஷகுப்தனுக்கும்- அவரது இராணி வசதா ஆகியோரின் மகனாவார். தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு பதவிக்கு வந்தார். இவருக்கு இரணகேசரின் என்ற தம்பியும் சிவானந்தின் என்ற மகனும் இருந்தனர். [3]

ஆட்சி

தொகு

இவரது இளைய சகோதரர் இரணகேசரின் இவரது இராணுவ வெற்றிகளில் இவருக்கு ஆதரவளித்தார். இவரது ஆட்சியின் கீழ், பாண்டுவம்சிகளின் தலைநகரான சிர்பூர் அதன் பொற்காலத்தைக் கண்டது. இந்த நகரம் கலாச்சார மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் நம்பமுடியாத வளர்ச்சியைக் கண்டது.[1] பல்வேறு மதங்களுக்கு அரச ஆதரவு வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு கோவில்களும், மடங்களும் கட்டப்பட்டன.[1] சிர்பூரில் உள்ள மிக முக்கியமான பௌத்த மடாலயம் இவரால் கட்டப்பட்டது. இவரது 57-வது ஆட்சிக்கால தேதியிடப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இவர் குறைந்தது 57 ஆண்டுகள் ஆட்சி செய்ததைக் குறிக்கிறது. இவர் அமைதியான மற்றும் வளமான ஆட்சியை செய்தார். மேலும் பாண்டுவம்சிகள் இவரது கீழ் தங்கள் உச்சத்தை அடைந்திருக்கலாம். [2][3][1] புகழ்பெற்ற சுரங் திலா கோவில் இவரால் கட்டப்பட்டது.[4][1]

சுவான்சாங்கின் வருகை

தொகு

சீனத் துறவியும், பயணியும், யாத்ரீகருமான சுவான்சாங், இவரது ஆட்சியின் போது தெற்கு கோசலத்திற்குச் சென்றிருக்கலாம்.[1]

அவர் கோசலத்தை, கியாவோ-சா-லோ, சுமார் 5000 லி சுற்றுவட்டத்தில் உள்ள நாடு என்று குறிப்பிடுகிறார். தலைநகரின் பெயரைக் குறிப்பிடாமல், அது சுற்று வட்டாரத்தில் 40 லி என்று கூறுகிறார். அதன் மிகவும் அடர்த்தியான மக்கள்தொகையை அவர் விவரிக்கிறார். ஆண்கள் உயரமானவர்களாகவும், கருப்பு நிறத்திலும், தைரியமும் துடிப்பானவர்களாகவும் இருந்தனர். என்கிறார். அவர் மதவெறியர்களையும் விசுவாசிகளையும் இங்கே கண்டார். அரசர்கள், யாருடைய பெயரையும் அவர் வழங்கவில்லை. ஆனால் அரசர் சத்திரிய இனத்தைச் சேர்ந்தவர் என்றும், ஆனால் புத்தரின் சட்டத்தை மதிக்கிறார் என்றும், அவரது நல்லொழுக்கமும் அன்பும் மிகவும் பிரபலமானது என்கிறார். 10000க்கும் குறைவான புத்த பிக்குகளைக் கொண்ட சுமார் நூறு சங்கராமங்கள் மகாயானத்தைச் சேர்ந்தவை. ஏறக்குறைய எழுபது தேவ கோவில்களும் இருந்தன. மௌரிய மன்னன் அசோகரால் கட்டப்பட்ட ஒரு தூபியையும் அவர் குறிப்பிடுகிறா. அங்கு புத்தரும் தனது அற்புதங்களைக் காட்டினார் என்கிறார். தூபத்துடன் இணைக்கப்பட்ட மடத்தில் நாகார்ச்சுன போதிசத்வர் வாழ்ந்தார் என்கிறார்.[1]

மதம்

தொகு

பாலார்ச்சுனன், சைவ சமயத்தைப் பின்பற்றினார். இவரது முத்திரையில் சிவனின் வாகனமான நந்தி இடம்பெற்றது.[5] இவர் தனது தாய்வழி மாமா பாஸ்கரவர்மனின் (வசதாவின் சகோதரர்) வேண்டுகோளின் பேரில் ஒரு புத்த மடாலயத்திற்கு ஒரு கிராமத்தை வழங்கினார்.[2]

இவருக்குப் பின்னர்

தொகு

மகாசிவகுப்த பாலார்ச்சுனனுக்குப் பிறகு, சிர்பூர் அரசியல் மேடையில் அதன் முக்கியத்துவத்தை இழந்தது. இருப்பினும் கலாச்சார முக்கியத்துவம் தொடர்ந்தது. நளர்களால் வம்சமும் சில இழப்புகளைச் சந்தித்தது. தெற்கு கோசாலையின் பாண்டுவம்சிகள் இவரது மரணத்திற்குப் பிறகு வீழ்ச்சியடையத் தொடங்கினர். மேலும் இவருக்குப் பிறகு பாண்டுவம்சி மன்னர்கள் பற்றிய பதிவு எதுவும் இல்லை.[6][7][1]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 https://puratattva.in, https://puratattva.in. "Sirpur- An Icon of Dakshina-Kosala: Indian History and Architecture". Puratattva. Puratattva. Archived from the original on 2022-02-13. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13. {{cite web}}: External link in |first1= and |last1= (help)
  2. 2.0 2.1 2.2 Shastri 1995, ப. 169.
  3. 3.0 3.1 3.2 Shastri 1995, ப. 161.
  4. https://timesofindia.indiatimes.com, https://timesofindia.indiatimes.com. "Surang Tila and other ruins". Times of India. Times of India. {{cite web}}: External link in |first1= and |last1= (help)
  5. Shastri 1995, ப. 176.
  6. Shastri 1995, ப. 172.
  7. Shastri 1995, ப. 175.

உசாத்துணை

தொகு