மகேந்திரா பொறியியல் கல்லூரி

சேலம் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரி

மகேந்திர பொறியியல் கல்லூரி (Mahendra College of Engineering) (முன்னர் மகா பொறியியல் கல்லூரி) என்பது தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி மகேந்திர கல்வி அறக்கட்டளையின் ஒரு பிரிவு ஆகும், இது தொழில்தேடும் மாணவர்களின் உயர்கல்வித் தேவையை நிறைவு செய்து அவர்களை பொறியாளர்களாகவும், அறிவியலாளர்களாகவும் ஆக்கவும் 2005 இல் நிறுவப்பட்டது. இது சேலம்-சென்னை நெடுஞ்சாலையில், மின்னம்பள்ளியில் அமைந்துள்ளது. இதன் வளாகத்தின் கிழக்கே ஆத்தூர், மேற்கில் சேலம், தெற்கே நாமக்கல் மற்றும் வடக்கே தர்மபுரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த கல்லூரி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

கல்வி

தொகு

இந்தக் கல்லூரி பி.இ. மற்றும் பி.டெக் போன்ற இளநிலைப் படிப்புகளை வழங்குகிறது. மேலும் எம்.சி.ஏ, முதுகலை வணிக மேலாண்மை மற்றும் எம்.இ போன்ற முதுநிலை படிப்புகளையும் வழங்குகிறது.

மேலாண்மை

தொகு
  • தலைவர் : எம். ஜி. பாரத்குமார்
  • நிர்வாக இயக்குநர் : பொறி பி. மகா அஜய் பிரசாத்
  • முதல்வர்: என். மால்முருகன்