மங்கம்மா சபதம் (1985 திரைப்படம்)
மங்கம்மா சபதம் (Mangamma Sabadham) செப்டம்பர் 21, 1985 ஆம் ஆண்டு அன்று கே. விஜயன் இயக்கத்தில் கமல்ஹாசன், மாதவி, சத்யராஜ், மற்றும் பலர் நடித்தது வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். மலையாளத்தில் ‘ராண்டும் ராண்டும் அஞ்சு ’ என்ற பெயரில் வெளியானது.[சான்று தேவை]
மங்கம்மா சபதம் | |
---|---|
மங்கம்மா சபதம் திரைப்படத்தின் நீலக்கதிர் இறுவட்டுவின் முன்பக்க அட்டையாகும். | |
இயக்கம் | கே.விஜயன் |
தயாரிப்பு | சுரேஷ் பாலாஜி |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | கமல்ஹாசன் மாதவி சத்யராஜ் சுஜாதா |
ஒளிப்பதிவு | திவாரி |
படத்தொகுப்பு | கே. வாசு |
வெளியீடு | செப்டம்பர் 21, 1985(India)[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை விளக்கம்
தொகுமங்கம்மா சபதம் திரைப்படம் 1985 ஆம் ஆண்டு அன்று கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் அவர்கள் இரண்டு கதாபாத்திரங்களன தந்தை மற்றும் மகனாக நடித்துள்ளார். நடிகை சுஜாதா இரண்டாவது (மகன்) கமல்ஹாசனின் அம்மாவாகவும், நடிகை மாதவி காதலியாகவும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் சத்யராஜ் வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இக் கதையின் துவக்கம் கமல்ஹாசனின் சொத்துக்களை தனதாக்கிக் கொள்வதர்க்காக கமல்ஹாசனையும் அவர் மனைவியான சுஜாதாவையும் கொலை செய்ய சத்யராஜ் திட்டம் தீட்டுகிறார். அதில் கமல்ஹாசன் (தந்தை) இறந்துவிடுகிறார். கர்பினியான சுஜாதா தப்பித்து விடுகிறார். அதன் பிறகு சுஜாதாவிற்கு மகனாக கமல்ஹாசன் பிறக்கிறார். பின்னர் தன் மகனைவைத்து தன் கனவரைக் கொலை செய்தவர்களைப் பழிவாங்குகிறார் சுஜாதா, சத்யராஜின் கூட்டாளியாக சுகுமாரி நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் ஆச்சி மனோரமா சென்னை தமிழான மெட்ராஸ் பாஷையில் பேசி நகைச்சுவையாக நடித்துள்ளார். மேலும் இத் திரைப்படம் நவம்பர் 23, 1984 ஆம் ஆண்டு அன்று மிதுன் சக்கரவர்த்தி, ஸ்மிதா பாட்டீல், அம்ரிஷ் பூரி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த, கசம் பைதா கரனே வாலே கி என்ற இந்தித் திரைப்படத்தின் தழுவல் ஆகும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "மங்கம்மா சபதம் திரைப்படத்தின் வரலாறு". 2007. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 10, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - (ஆங்கிலம்) - ↑ "Box-Office". ibosnetwork.com. பார்க்கப்பட்ட நாள் 2011-06-16.[தொடர்பிழந்த இணைப்பு]