மங்காத்தா (விளையாட்டு)

மங்காத்தா ஒரு சீட்டாட்டம். இது சட்டத்திற்குப் புறம்பாகச் சூதாடப் பயன்படுகிறது.[1] இதனை ஆட இரு ஆட்டக்காரர்களும் ஒரு சீட்டுக்கட்டும் தேவை. ஆட்டக்காரர்கள் சீட்டைப் போடுபவர் சீட்டுத் தெரிவு செய்பவர் என இரு வகைப்படுவர்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு ஆட்டக்காரர்களும் சமமான அளவு பந்தயம் கட்டுவர். பின் சீட்டைப் போடுபவர் எதிராளியிடம் ஒரு சீட்டைத் தெரிவு செய்யச் சொல்லுவார். சீட்டு தெரிவான பின்னால், தன் கையிலிருந்த கட்டிலிருந்து சீட்டுகளை ஒவ்வொன்றாக இரண்டு பிரிவுகளாகப் பிரித்துப் போடுவார். ஒன்று “உள்ளே” இன்னொன்று “வெளியே”. ஒவ்வொரு சீட்டு விழும் போது “உள்ளே” அல்லது “வெளியே” என்று உரக்க சொல்லுவார். எதிராளி தேர்வு செய்த சீட்டு வரும் வரை சீட்டுகளைப் போட்டுக் கொண்டே இருப்பார். தேர்வு செய்யப்பட்ட சீட்டு “உள்ளே” பிரிவில் விழுந்தால் சீட்டைப் போடுபவர் வென்றவராவர்; “வெளியே” பிரிவில் விழுந்தால் சீட்டைத் தெரிவர் வென்றவராவார். பந்தையப் பணம் முழுவதும் வெற்றி பெற்றவருக்கு.

மேற்கோள்கள்

தொகு
  1. ரம்மி ஆடலாம்; மங்காத்தா கூடாது - உயர்நீதிமன்றம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்காத்தா_(விளையாட்டு)&oldid=3377502" இலிருந்து மீள்விக்கப்பட்டது