மஞ்சள் தலைப்பாகைக் கிளர்ச்சி

மஞ்சள் தலைப்பாகைக் கிளர்ச்சி என்பது கி. பி. 184இல் சீனாவில் ஆன் பேரரசின் ஆட்சியின் போது இடம்பெற்ற ஒரு உழவர் கிளர்ச்சி ஆகும். கிளர்ச்சியாளர்கள் தமது தலையில் கட்டிய மஞ்சள் துணியின் காரணமாக இவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிறது. கிளர்ச்சியாளர்கள் தாவோயியப் பிரிவுகளைப் பின்பற்றுபவர்களாக இருந்தது தாவோயிய வரலாற்றில் முக்கியம் பெறுகிறது.

வேளாண் நெருக்கடி, பஞ்சம், மிகை வரிகள், ஒடுக்குமுறை ஆகியவை இந்தக் கிளர்ச்சியின் காரணங்களாகக் கருதப்படுகின்றன. இந்தக் கிளர்ச்சி உடனேயே அடக்கப் பட்டது எனினும் ஆன் அரசை பலவீனம் அடையச் செய்து பின்னர் அதன் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம் ஆகவும் அமைந்தது.