முதன்மை பட்டியைத் திறக்கவும்

மஞ்சுளா விஜயகுமார்

மஞ்சுளா விஜயகுமார் (செப்டம்பர் 9, 1953 - சூலை 23, 2013) தென்னிந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் விஜயகுமாரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வனிதா, பிரீத்தா, சிறீதேவி என மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.[1]

மஞ்சுளா விஜயகுமார்
பிறப்புசெப்டம்பர் 9, 1953(1953-09-09)
இறப்பு23 சூலை 2013(2013-07-23) (அகவை 59)
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1969-2013
வாழ்க்கைத்
துணை
விஜயகுமார்
பிள்ளைகள்சிறீதேவி, அருண் விஜய், வனிதா, பிரீத்தா, அனித்தா, கவிதா

நடிப்புதொகு

மஞ்சுளா முதன் முதலில் 1969 ஆம் ஆண்டில் சாந்தி நிலையம் திரைப்படத்தில் ஒரு துணை நடிகையாக நடித்தார். 1971 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் உடன் இணைந்து ரிக்சாக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். 1970களில் பல படங்களில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என். டி. ராமராவ், கமல்ஹாசன், விஸ்ணுவர்தன், ரஜனிகாந்த் எனப் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 1980களின் இறுதியில் இருந்து துணை நடிகையாகப் பல படங்களில் நடித்தார்.[2][3] 2013 சூலை 23 இல் இவர் தனது வீட்டில் கட்டிலில் இருந்து கீழே வீழ்ந்ததை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார்.[4]

இவர் எம்.ஜி.ஆர் உடன் ரிக்சாக்காரன் (1971), இதய வீணை (1972), உலகம் சுற்றும் வாலிபன் (1973), நேற்று இன்று நாளை (1974), நினைத்ததை முடிப்பவன் (1975) என மொத்தம் ஐந்து படங்களில் இணைந்து நடித்துள்ளாா்.

சிவாஜி கணேசன் உடன் எங்கள் தங்க ராஜா (1973), என் மகன் (1974), அவன்தான் மனிதன் (1975), மன்னவன் வந்தானடி (1975), அன்பே ஆருயிரே (1975), டாக்டர் சிவா (1975), சத்யம் (1976), உத்தமன் (1976), அவன் ஒரு சரித்திரம் (1977), நெஞ்சங்கள் (1982) என பத்து படங்களில் இணைந்து நடித்துள்ளாா்.

மேற்கோள்கள்தொகு

  1. Dorairaj, S (2006-02-08). "Actor Vijayakumar returns to AIADMK". Online edition (த இந்து). http://www.hindu.com/2006/02/08/stories/2006020818560200.htm. பார்த்த நாள்: 2009-06-24. 
  2. "Bollywood News: Bollywood Movies Reviews, Hindi Movies in India, Music & Gossip". Rediff.com. பார்த்த நாள் 2010-08-19.
  3. Murallitharan, M (2000-05-25). "Groove on, Mollywood (a feature on Tamil cinema)". Showbiz section (New Straits Times). http://www.highbeam.com/doc/1P1-82541315.html. பார்த்த நாள்: 2009-06-24. 
  4. http://tamil.oneindia.in/movies/news/2013/07/actress-majula-hospitalised-179635.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சுளா_விஜயகுமார்&oldid=2826800" இருந்து மீள்விக்கப்பட்டது