மஞ்சு சர்மா (உயிரியலாளர்)

மஞ்சு சர்மா (Manju Sharma) (பிறப்பு: 1940 திசம்பர் 13) ஓர் இந்திய உயிரித் தொழில்நுட்பவியலாளரும், இந்தியாவில் பல அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கொள்கை உருவாக்கும் அமைப்புகளின் நிர்வாகியும் ஆவார். இவர் சமீபத்தில் குசராத்தின் காந்திநகரில் உள்ள இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும் அதன் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார். இவர் முன்னர் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தில் உயிரித் தொழில்நுட்பத் துறையின் செயலாளராக பணியாற்றினார். [1] 2007இல் பத்ம பூசண் விருது பெற்றார் . [2]

மஞ்சு சர்மா
பிறப்பு(1940-12-13)13 திசம்பர் 1940
வாழிடம்இந்தியா
குடியுரிமைஇந்தியர்
தேசியம் இந்தியா
துறைஉயிரித் தொழில்நுட்பம், தாவர அறிவியல்
பணியிடங்கள்
  • புருதே பல்கலைக்கழகம்
  • டென்மார்க், தாவர உடற்கூறியல் மற்றும் சைட்டாலஜி நிறுவனம்
  • வன ஆய்வு நிறுவனம்
  • மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி நிறுவனம்
Patronsஇந்திய அரசு, இந்தியாவில் கல்விக்கான பூரி அறக்கட்டளை
கல்விமுதுகலை அறிவியல், முனைவர்
கல்வி கற்ற இடங்கள்இலக்னோ பலகலைக்கழலகம்
அறியப்படுவதுஉயிரி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் நிர்வாகம்
துணைவர்வினோத் பிரகாஷ் சர்மா
பிள்ளைகள்அமித் சர்மா

பணிகள் தொகு

இந்தியாவின் பல முன்னோடி உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் இவரது பங்கு இருந்தது. [3] தடுப்புத்திறனியல் தேசிய ஆய்வு நிறுவனம், இலக்னோ, தாவர மரபணு ஆராய்ச்சி நிறுவனம், மதுரை உயிரி ஆராய்ச்சி மையங்கள் தில்லி பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு உயிரியல் பிரிவு, டி.என்.ஏ கைரேகை மற்றும் நோயறிதலுக்கான மையம் உள்ளிட்ட பல நிறுவனங்களை நாட்டில் நிறுவுவதில் இவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். [4]

வாழ்க்கை தொகு

இவர், கல்வியாளரும் அரசியல்வாதியுமான மதன் மோகன் மாளவியாவின் பேத்தியாவார். இவர், மலேரியா நோய் வல்லுநரும் பூச்சியியல் வல்லுநரானமான வினோத் பிரகாஷ் சர்மாவை மணந்தார். இவர்களது மகன் அமித் சர்மா, புரத படிகவியல் நிபுணத்துவம் பெற்றவர். [5]

மேற்கோள்கள் தொகு

  1. "Creation of DBT". Department of Biotechnology இம் மூலத்தில் இருந்து 12 செப்டம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160912075211/http://www.dbtindia.nic.in/about-us/creation-of-dbt/. 
  2. "Padma Bhushan Awardees". Government of India இம் மூலத்தில் இருந்து 13 September 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160913184615/http://archive.india.gov.in/myindia/padmabhushan_awards_list1.php?start=180. 
  3. Menon, M.G.K (2004). "Chp 2: Development of New Biology in India: Science and Relevance". in Basu, Sandip K.; Batra, Janendra K.; Salunke, Dinakar M.. Deep Roots, Open Skies: New Biology in India. 
  4. "The Shaping of Indian Science: Presidential Addresses Vol 3: 1982-2003". Indian Science Congress Association. https://books.google.com/books?id=G700JFQreS8C&printsec=frontcover. 
  5. "A Biotech Pioneer and Champion". BioSpectrum India Magazine இம் மூலத்தில் இருந்து 11 September 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160911040152/http://www.biospectrumindia.com/biospecindia/news/156717/life-time-achievement.