மடிவாளா ஏரி

(மடிவாலா ஏரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மடிவாளா ஏரி[2] (Madiwala Lake) என்பது இந்தியாவின் பெங்களூரில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஏரி 114.3 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரி சோழர்களால் ஒரே நாளில் கட்டப்பட்டது என்று புராணங்கள் கூறுகின்றன. 1990களின் முற்பகுதி வரை ஏரியின் நீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருந்தது. அதன்பின், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் நகரக் கழிவுநீர் நீர்நிலைகளில் சேருவதால், குடிப்பதற்குத் தகுதியற்றதாக மாறிவிட்டது. மேலும் ஏரி நீரானது படிப்படியாக மாசடைந்துவிட்டது.மடிவாளா ஏரி பெங்களூர் நகரில் (12° 54' 28" வடக்கு, 77° 37' 0" கிழக்கு) பிடிஎம் லேவுட்டில் அமைந்துள்ளது. இந்த ஏரி புலம்பெயர்ந்த பறவைகளின் தாயகமாகும். இந்த ஏரியின் பராமரிப்பு கர்நாடக மாநில வனத்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இங்குச் சிறுவர் பூங்காவும் உள்ளது. பெங்களூரு ஏரி மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து இந்த ஏரிக்கு 2016ல் ரூ.25 கோடி நிதியுதவி கிடைத்தது.

மடிவாளா ஏரி[1]
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
Map showing the location of மடிவாளா ஏரி[1]
Map showing the location of மடிவாளா ஏரி[1]
மடிவாளா ஏரி
அமைவிடம்மடிவாளா, பெங்களூரு, இந்தியா
அருகாமை நகரம்பெங்களூரு
ஆள்கூறுகள்12°54′21″N 77°36′53″E / 12.90583°N 77.61472°E / 12.90583; 77.61472
Map

ஏரி வாழ்விடம் தொகு

பறவைகள் தொகு

 
மடிவாளா ஏரியில் கொக்கு

மடிவாளா ஏரி குளிர்காலத்தில் (நவம்பர்-திசம்பர்) அதிக எண்ணிக்கையிலான கூழைக்கடா இடம்பெயர்ந்து வருவதைக் காணலாம். இந்த கூழைக்கடா குழுக்களாக வாழ்கின்றன. இவற்றின் முக்கிய உணவு மீன். இந்த புலம்பெயர்ந்த பறவைகளை இலங்கையிலும் காணலாம். இவை பறந்து சென்று தரையிறங்கும் காட்சி கண்களைக் கவரும் வகையில் இருக்கும். பொதுவாக இவற்றின் இறக்கைகள் சுமார் 8.5 அடிகள் வரை பரவியிருக்கும். இப்பறவைகளுடன் கொக்கு இனங்களையும் பார்க்கலாம்.

படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Islands of 'hope' at Madiwala Lake". Bangalore Mirror.
  2. "Artificial 'floating islands' clean Madiwala Lake". Deccan Herald. 23 March 2019.

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மடிவாளா_ஏரி&oldid=3406447" இலிருந்து மீள்விக்கப்பட்டது