மட்டாஞ்சேரி
மட்டாஞ்சேரி (Mattancherry) என்பது இந்தியாவின் கொச்சி நகரில் உள்ள ஒரு பகுதியாகும். இது நகர மையத்திலிருந்து தென்மேற்கில் சுமார் 9 கி.மீ தூரத்தில் உள்ளது. மட்டாஞ்சேரி என்ற பெயர் "ஆஞ்சேரி மட்டம்" என்பதிலிருந்து வந்தது என்று கூறப்படுகிறது. "நம்பூதிரி இல்லமான" இதை பின்னர் வெளிநாட்டு வர்த்தகர்கள் அதை மட்-ஏஞ்சரி என்று உச்சரித்தனர். படிப்படியாக மட்டாஞ்சேரி ஆனது. முந்தைய 'ஏஞ்சேரி மட்டம்' அமைந்த இடம் இப்போது ஒரு தமிழ் பிராமணக் குடியேற்றமாக உள்ளது.
மட்டாஞ்சேரி
மேல் கொச்சி | |
---|---|
சுற்றுப்புறப் பகுதி | |
![]() | |
ஆள்கூறுகள்: 9°57′45″N 76°15′15″E / 9.96250°N 76.25417°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | எர்ணாகுளம் |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 682002 |
வாகனப் பதிவு | கேஎல்-43 |
அரசியல்
தொகுமட்டாஞ்சேரி கொச்சி சட்டமன்றத் தொகுதி மற்றும் எர்ணாகுளம் மக்களவைத் தொகுதி ஆகியவற்றின் ஒரு பகுதியாகும். [1]
குறிப்பிடத்தக்க இடங்கள்
தொகுஇந்தியாவின் மிகப் பழமையான யூத தொழுகை கூடமான பரதேசி யூத தொழுகைக் கூடம், [2] மட்டாஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், மட்டாஞ்சேரி பழையனூர் அரச கோயில் ஆகியவை இங்கு அமைந்துள்ளன.
புகைப்படங்கள்
தொகு-
மட்டாஞ்சேரியில் உள்ள சர்வதேச சுற்றுலா காவலர் அருங்காட்சியகம்
-
குசராத்திய பாரம்பரிய இனிப்புகள்
-
மட்டாஞ்சேரியில் உள்ள புனித ஜார்ஜ் குன்னன் குரிஷ் பழைய சிரிய தேவாலயம்
குறிப்புகள்
தொகு- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Kerala. Election Commission of India. Archived from the original (PDF) on 4 March 2009. பார்க்கப்பட்ட நாள் 2008-10-19.
- ↑ Abram, David. The Rough Guide to Kerala (2nd ed.). இலண்டன், ஐக்கிய இராச்சியம்: Penguin Books. p. 181. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84836-541-4.|
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் மட்டாஞ்சேரி தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.