மணல்மகுடி என்பது தமிழ்நாட்டில் ச. முருகபூபதியால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் நாடக அமைப்பு ஆகும். தமிழ்நாட்டின் தென்மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி என்ற ஊரில் மணல்மகுடி நாடக நிலம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் மிக முகாமையான நாடகக்குழுவாக தற்போது இயங்கிவருகிறது. பல்வேறு சர்வதேச நாடக விழாக்களில் பங்கேற்று இருபதிற்கும் மேலான முழு நாடகங்கள், முப்பதிற்கும் மேலான குழந்தைகள் நாடகங்கள், என தமிழ்நாடு முழுவதும் நூற்றைம்பதிற்கும் மேலாகவும், இந்தியா முழுவதுமாக இருபதிற்கும் மேலான நாடக நிகழ்வுகளை நாடகங்களை நடத்தியிருக்கிறது.

மணல்மகுடி
மணல்மகுடி நாடக நிலம் நிறுவனர் - ச. முருகபூபதி ஆண்டு - 1999 இடம் - கோவில்பட்டி, தமிழ்நாடு

தோற்றம்

தொகு

மணல்மகுடி நாடக நிலம் 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பின்னர் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாக இயங்கிவருகிறது.

நோக்கம்

தொகு

தமிழ்நிலத்தின் கலைப்பண்பாட்டுக் குறியீடுகளை எதிர்கால தமிழ்ச் சமூகத்தின் கலாச்சார பண்பாட்டு நினைவுகளில் இருத்தும் நோக்கத்தையே இதன் முதன்மையான நோக்கமாக இந்நாடகக்குழு கருதுகிறது.

நிறுவனர்

தொகு

மணல்மகுடி நாடக நிலத்தின் நிறுவனர் ச.முருகபூபதி ஆவார்.[1][2] இவர் தமிழ்நாட்டின் மிக முக்கிய நாடக ஆளுமையாக விளங்கிய மதுரகவி பாசுக்கரதாசின் மகள்வழிப் பெயரனும் எழுத்தாளர் எம்.எஸ் சண்முகத்தின்[3] மகனும் ஆவார்.எழுத்தாளர்கள் ச. தமிழ்ச்செல்வன்[4][5] மற்றும் கோணங்கி இவரின் உடன் பிறந்த சகோதரர் ஆவர். மணல்மகுடியின் நிறுவனரும் இயக்குனருமாகிய ச. முருகபூபதி 1987 ஆம் ஆண்டு தெரு நாடக இயக்கத்தைத் தொடங்கியது முதல் நடிகர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர் என சுமார் முப்பது ஆண்டுகளாக நாடகத்துறையில் செயல்பட்டுவரும் இவர், கடந்த பதினைந்து ஆண்டுகளாக குழந்தைகளுக்கான நாடகங்களை இயற்றியும் கற்பித்தும் வருகிறார். குழந்தைகள் நாடகங்களில் பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டமைக்காகவும் இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி 2011 ஆம் ஆண்டிற்கான உஸ்தாத் பிஸ்மில்லாகான் யுவ புரஸ்கார்[6] விருதை வழங்கி கௌரவித்தது.

மணல்மகுடியின் நாடகங்கள்

தொகு
  • சரித்திரத்தின் அதீத மியூசியம்
  • உதிரமுகமூடி[7]
  • வனத்தாதி
  • கூந்தல் நகரம்
  • செம்மூதாய்[8]
  • குற்றம் பற்றிய உடல்
  • மிருகவிதூஷகம்
  • சூர்ப்பணங்கு[9]
  • குகைமரவாசிகள்
  • மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி[10][11]
  • நீர்நாடோடிகள்

தேசிய மற்றும் உலக நாடக விழாக்களில் பங்கேற்ற நாடகங்கள்

தொகு

தேசிய நாடகத் திருவிழாக்கள்

தொகு
  • ஜூன் 2011 - “மிருகவிதூஷகம்” (Animal Jesters) புரிசை நாடகத் திருவிழா, புரிசை, காஞ்சிபுரம், தமிழ்நாடு
  • அக்டோபர் 2011 - “மிருகவிதூஷகம்” (Animal Jesters) கமீலான் சர்வதேச கலைத்திருவிழா – 2011[12] புதுச்சேரி
  • செப்டம்பர் 2012 - “சூர்ப்பணங்கு” கமீலான் சர்வதேச கலைத்திருவிழா – 2012[12] புதுச்சேரி
  • 2013 - “சூர்ப்பணங்கு” முத்ராதி தேசிய நாடகத்திருவிழா, நம்ம துளுவ கலா சங்கேதனம், கார்க்காலா], உடுப்பி, கர்நாடகா.
  • மார்ச் 2013 - “மிருகவிதூஷகம்” (Animal Jesters) மஹிந்திரா மாண்பமை நாடக விருதுகள்[13] (META) தேசிய நாடகத் திருவிழா, புதுதில்லி.
  • செப்டம்பர் 2013 - “ குகைமரவாசிகள்” (Cave Tree Dwellers), உஸ்தாத் பிஸ்மில்லாகான் யுவ புரஸ்கார் இசை, நடன, நாடகத் திருவிழா, சங்கீத நாடக் அகாடமி, புதுதில்லி.
  • சனவரி 2014 - “குகைமரவாசிகள் ” முத்ராதி தேசிய நாடகத்திருவிழா, நம்ம துளுவ கலா சங்கேதனம், கார்க்காலா, உடுப்பி, கர்நாடகா.
  • மார்ச் 2016 - குகைமரவாசிகள்” (Cave Tree Dwellers) குப்பீ வீரண்ணா தேசிய நாடகத் திருவிழா, Dr. குப்பீ வீரண்ணா ரங்காமிந்தரா, கர்நாடகா
  • மார்ச் 2016 - “குகைமரவாசிகள்”, மஹிந்திரா மாண்பமை நாடக விருதுகள்[13], (META) தேசிய நாடகத்திருவிழா புதுதில்லி.
  • நவம்பர் 2016 - “மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி” (Illusional Clowns Mystique Mirror) ரங்கா சங்கரா நாடகத் திருவிழா<, பெங்களூர், கர்நாடகா.
  • 2017 - “மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி” மினர்வா நாட்யசன்ஸ்கிருதி சார்ச்சகேந்திரா மூன்றாவது தேசிய நாடகத் திருவிழா[14]கொல்கத்தா
  • மார்ச் 2017 - “மிருகவிதூஷகம்” செய்தி மக்கள் தொடர்புத்துறை, கேரளா அரசு ) தேசிய நாடகத் திருவிழா-2017[15] திருவனந்தபுரம், கேரளா.
  • ஏப்ரல் 2017 - “மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி” ராங்திவானி தேசிய நாடகத்திருவிழா-2017 ராங்காயான தர்வார், கர்நாடகா

சர்வதேச நாடகத் திருவிழாக்கள்

தொகு
  • சனவரி 2009 - செம்மூதாய் பதினொன்றாவது பாரத் ரங் மகோத்சவ், புதுதில்லி.
  • சனவரி 2012 - மிருகவிதூஷகம் பதினான்காவது பாரத் ரங் மகோத்சவ், தேசிய நாடகப்பள்ளி, புதுதில்லி.
  • சனவரி 2013 - சூர்ப்பணங்கு பதினைந்தாவது பாரத் ரங் மகோத்சவ், தேசிய நாடகப்பள்ளி, புதுதில்லி.
  • பிப்ரவரி 2015 - மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி பதினேழாவது பாரத் ரங் மகோத்சவ், தேசிய நாடகப்பள்ளி, புதுதில்லி.
  • செப்டம்பர் 2016 - மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி பாண்டிஆர்ட் சர்வதேச கலைத் திருவாழா- 2017, பாண்டிச்சேரி.
  • பிப்ரவரி 2017 - மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி, கேரளா சர்வதேச நாடகத் திருவிழா – 2017 திருச்சூர், கேரளா.

பணிகள்

தொகு

மணல்மகுடி நாடக நிலம் குழு கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ்நாட்டின் மரபுசார்ந்த தொல் சடங்குகளை, இசைவடிவங்களை, கலைபண்பாட்டு நிகழ்வுகளை ஆய்வுசெய்து அவற்றிலிருந்து நவீன நாடக மொழியை உருவாக்கி தமிழகம் மற்றும் இந்தியாவெங்கும் பல்வேறு நாடக நிகழ்வுகளில் நவீன நாடகங்களை நிகழ்த்திவருகிறது. குழந்தைகள் நாடகங்கள், நவீன நாடகங்கள், நாடகக்கலைப் பண்பாட்டுப் பயிற்சிப்பட்டறைகள், நாடகக்கலையாக்கம் தொடர்பான ஆய்வுகள் என நவீன நாடகக்குழுவாக மணல்மகுடி தமிழ்நாட்டின் தொல்கலைக்கான துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

கருத்தரங்குகள் நடத்துதல்

தொகு

நாடக வரலாறு, நாடகக் கல்வி, பண்பாடும் நாடகமும், நாடகக்கலையின் இன்றைய தேவை, பார்வையாளர் பண்பாடு போன்ற நாடகம் தொடர்புடைய தலைப்புகளில் இந்தியாவின் தலைசிறந்த நாடகப்படைப்பாளிகள், பேராசிரியர்கள், கலைஞர்களைக் கொண்டு அறிவுசார் கருத்தரங்குகள் நடத்துதல்.

கலைவழிக்கல்வி பயிற்சிப் பட்டறைகள்

தொகு

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நாடகக்கலைஞர்களைக் கொண்டு கதை சொல்லும் கலை, கதை வழிக்கற்பித்தல், ஓவியம் இயற்கைச் செயல்பாட்டுவழிக் கற்றல், குறித்த பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறது.

பொம்மைகள் தயாரிப்புப் பயிற்சி

தொகு

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் துணிகள் மற்றும் காகிதங்களைக் கொண்டு பொம்மைகள் தயாரித்தல் பயிற்சிகளை கொடுத்து வருகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.mumbaitheatreguide.com/dramas/features/17/mar/feature-ritualistic-and-raw-s-murugaboopathys-theatre.asp#
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-12-13. பார்க்கப்பட்ட நாள் 2017-07-08.
  3. http://keetru.com/index.php/2009-10-07-10-44-25/2011-sp-41283151/17599-2011-11-30-03-21-35
  4. https://www.panuval.com/s-tamilselvan
  5. http://satamilselvan.blogspot.in/
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-04. பார்க்கப்பட்ட நாள் 2017-07-08.
  7. http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/2010/12372-2011-01-11-10-01-13
  8. http://www.vikatan.com/thadam/article.php?aid=131546
  9. http://bengaluru.citizenmatters.in/3466-soorpanangu-a-tribute-or-a-dirge-to-woman-3466
  10. http://www.thehindu.com/features/metroplus/society/unmasking-clowns/article7685381.ece
  11. http://epaper.newindianexpress.com/605429/The-New-Indian-Express-Madurai/05-10-2015#page/3/2
  12. 12.0 12.1 https://filmfreeway.com/festival/KameleonInternationalFilmFestival
  13. 13.0 13.1 http://metawards.com/
  14. http://indianexpress.com/article/cities/kolkata/national-theatre-fest-starts-january-17/
  15. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-03. பார்க்கப்பட்ட நாள் 2017-07-08.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணல்மகுடி&oldid=3735378" இலிருந்து மீள்விக்கப்பட்டது