மணிபென் படேல்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
மணிபென் படேல் (Maniben Patel) (3 ஏப்ரல் 1903 - 1990) இந்திய விடுதலை இயக்க வீராங்கனையும், இந்திய நாடாளுமன்ற மன்ற உறுப்பினரும்,[1] இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இந்திய அரசின் துணைபிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்த சர்தார் வல்லபாய் படேலின் மகளும் ஆவார்.[2]
மணிபென் படேல் | |
---|---|
![]() 1947-இல் மணிபென் படேல் | |
பிறப்பு | 3 ஏப்ரல் 1903 குசராத்து |
இறப்பு | 26 மார்ச் 1990 (அகவை 86) |
மகாத்மா காந்தியின் ஈர்ப்பால் அகமதாபாத்தில் செயல்பட்ட சபர்மதி ஆசிரமத்தில் தொண்டு செய்தவர்.
பிரித்தானிய இந்தியாவின் அரசுக்கு எதிராக காந்தியடிகளுடன் ஒத்துழையாமை இயக்கம் மற்றும் உப்புச் சத்தியாகிரகப் போராட்டாங்களில் கலந்து கொண்டு பல ஆண்டுகள் சிறை சென்றவர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு, 1942 முதல் 1945 முடிய மூன்று ஆண்டுகள் எரவாடா மத்தியச் சிறையில் சிறைவாசம் அனுபவித்தவர்.
மணிபென் படேல் இந்தியாவின் இரண்டாவது இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக குஜராத்தின் தெற்கு கைரா நாடாளுமன்றத் தொகுதிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு (1952–57) தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] in the second Lok Sabha (1957–62) from Anand.[4] மணிபென் படேல் குசராத்து மாநில இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பொதுச் செயலராகவும் (1953–56), துணைத் தலைவராகவும் (1957–64) செயல்பட்டவர்.
1964 முதல் 1970 முடிய இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். நெருக்கடி நிலையின் போது இந்திராகாந்தியை எதிர்த்து இந்திரா காங்கிரசு கட்சியிலிருந்து விலகி, நிறுவன காங்கிரசு கட்சியில் இணைந்தார். 1977-இல் ஜனதா கட்சியின் வேட்பாளராக மெக்சனா நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]
மேற்கோள்கள்தொகு
- ↑ Joginder Kumar Chopra (1993). Women in the Indian parliament: a critical study of their role. Mittal Publications. பக். 174. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7099-513-5.
- ↑ https://www.dailypioneer.com/2014/sunday-edition/patel-the-father.html
- ↑ http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1951/VOL_1_51_LS.PDF
- ↑ http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1957/Vol_I_57_LS.pdf
- ↑ "Lok Sabha Website Members Biodata". பார்த்த நாள் 2015-08-02.