மணிப்பூர் மாநிலத்தின் இசை

மணிப்பூர் மாநிலத்தில் காணப்படும் இசை வகைகள்

இந்தியா வின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் வாய்வழி கதை சொல்லலின் [1] பாரம்பரியம் மிக்க மாநிலங்களில் ஒன்றாகும். இங்கு இசைக்கப்படும் நாட்டுப்புற இசை நெடுங்காலமாக இருந்து வருவதாகும்.

வகைகள்

தொகு
  • எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் தன்னிச்சையாக நாயகனும் நாயகியும் மாறி மாறி பாடிக்கொள்ளும் குல்லாங் இசே [2] என்று அழைக்கப்படும் நாட்டுப்புற காதல் பாடல்கள் ,
  • இலாய் அரோபா விழாவின் போது ஒரே தாள லயத்தில் இசைக்கப்படும் இலாய் அரோபா இசே [3] எனப்படும் சிற்றின்ப மாயவாதம் பற்றிய மறைமுக குறிப்புகளுடன் பாடப்படும் பாடல்கள்,
  • மூங்கில் தண்டு மற்றும் [[தேங்காய்] சிரட்டை மூலம் செய்யப்படும் [[பெனா (இசைக்கருவி') துணையுடன் பாடப்படும் பெனா இசே
  • பாடல் மூலமும் நடனத்தின் மூலமும் இறைவனின் வாழ்க்கையையும் செயல்களையும் விவரிக்கும் பாரம்பரிய நாட் இசே பாடல்கள் (இவை மணிப்பூரில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளில் பாடப்படும் வகைகள்)
  • மணிப்பூரின் பெண்களால் பாடப்படும் நுபா பாலா எனப்படும் சைதன்ய மகாபிரபுவைப் பற்றிய பாடல்கள் (இவை மணிப்பூரில் மிகவும் சிறப்பு பெற்ற வகைகள்)
  • மிகப்பெரிய சிலம்பல் இசைக்கருவிகளை கொண்டு பாடப்படும் தோப் வகை பாடல்கள் ,
  • மனோஹர்ஷி என்ற பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதரின் பெயராலே அழைக்கப்படும் மனோஹர்ஷி வகை பாடல்கள் மற்றும்
  • கைதட்டல் ஒலியைக்கொண்டே இசைக்கப்பட்டு பாடப்படும் குபக் இசே வகை பாடல்கள் - என மணிப்பூர் மாநிலத்தின் இசை பரந்துபட்டது.

மெய்தீஸ் என்று அழைக்கப்படும் மணிப்பூர் மாநில மக்களின் பெனா இசைக்கருவி மணிப்பூர் மாநிலத்தின் தொன்மை மற்றும் மாநில பெருமைக்குரிய சின்னமாக விளங்குகிறது.

முக்கியத்துவம்

தொகு

திசம்பர் 2013 இல் நடைபெற்ற அசர்பைஜானின் பக்கூவில் நடந்த யுனெஸ்கோ குழுவின் கூட்டத்தின் எட்டாவது அமர்வின் போது "சங்கீர்த்தனை: சடங்கு பாடல், முரசு மற்றும் மணிப்பூரின் நடனம்" என்பது யுனெஸ்கோ அருகிவரும்[4] கலாச்சார பாரம்பரியத்தின் மனிதகுலத்தின் பிரதிநிதி என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. [5]

மேற்கோள்கள்

தொகு
  1. Thounaojam, Caeser (2018). "The Oral Folk Literature of the Ancient Meiteis of Manipur: An Analysis of its Cultural Significance". Space and Culture, India 6: 29–37. https://sydney.primo.exlibrisgroup.com/permalink/61USYD_INST/2rsddf/doaj_soai_doaj_org_article_874350d80db04625ab904468a2c29f84. 
  2. "Khulang Eshei Festival 2022 celebration in Imphal". dailyhunt. 2022-06-13. https://m.dailyhunt.in/news/india/english/imphalfreepress-epaper-dh384ef932aa754e4197510f510fd8b102/khulang+eshei+festival+2022+celebration+in+imphal+efforts+on+to+revive+dying+art-newsid-n394956050. 
  3. "Lai Haraoba Ishei". India9.com. 2005-06-07. பார்க்கப்பட்ட நாள் 2008-11-05.
  4. "NGO working to protect traditional music of Manipur". The Economic Times. 2008-04-17. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/ngo-working-to-protect-traditional-music-of-manipur/articleshow/2958919.cms?from=mdr. 
  5. "Sankirtana, ritual singing, drumming and dancing of Manipur". www.unesco.org. UNESCO. பார்க்கப்பட்ட நாள் 2 December 2016.