மண்டகப்பட்டு
மண்டகப்பட்டு (Mandagappattu) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மண்டகப்பட்டு ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மண்டகப்பட்டு கிராமத்தின் மக்கள் தொகை 1,965 ஆகும்.[4]
மண்டகப்பட்டு | |
அமைவிடம் | 12°06′28″N 79°27′16″E / 12.1077064°N 79.4543068°Eஆள்கூறுகள்: 12°06′28″N 79°27′16″E / 12.1077064°N 79.4543068°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விழுப்புரம் |
வட்டம் | விக்கிரவாண்டி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆ. அண்ணாதுரை, இ. ஆ. ப [3] |
சட்டமன்றத் தொகுதி | விழுப்புரம் |
சட்டமன்ற உறுப்பினர் |
சி.வி.சண்முகம் (அதிமுக) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
|
சிறப்புதொகு
மகேந்திர பல்லவன் என்கிற பல்லவ மன்னனால் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவிலாகக் கருதப்படும் மண்டகப்பட்டு குடைவரைக் கோயிலான இலக்சிதன் கோயில் எனும் மண்டகப்பட்டு திருமூர்த்தி கோவில் இங்கு அமைந்துள்ளது. இதுவே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயிலாகும். கி.பி 590 முதல் கி.பி 630 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டது. இக்கோயில். தமிழகக் கட்டிடக்கலை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகின்றது. மிகவும் எளிய, எழில் வாய்ந்த குடைவரைக் கோயிலாக இக்கோயில் விளங்குகிறது.[5]
மேற்கோள்கள்தொகு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Mandagapattu Population
- ↑ அருள்மிகு மண்டகப்பட்டு குடைவரைக் திருக்கோயில்