மண்ணீரல் மாற்று அறுவை சிகிச்சை

மண்ணீரல் மாற்று அறுவை சிகிச்சை (Spleen transplantation) என்பது மண்ணீரல் அல்லது மண்ணீரல் பகுதி துண்டுகளை ஒரு நபரிடமிருந்து இன்னொருவருக்கு மாற்றி பொருத்துவதாகும். இடமாற்றம் செய்யப்பட்ட பிற உறுப்புகளுக்கு நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மையைத் தூண்டுவதற்கான வாய்ப்புகள் குறித்த ஆராய்ச்சியின் கீழ் இச்சிகிச்சை உள்ளது. கொறிக்கும் உயிரின மாதிரிகளில் இம்மாற்று சிகிச்சையில் வெற்றி அடையாளம் காணப்பட்டுள்ளது. சமீபத்தில் மிகச்சிறிய பன்றிக் குட்டியில் மண்ணீரல் மாற்று அறுவை சிகிச்சையின் நோயெதிர்ப்புச் சகிப்புத்தன்மைக்கு சான்றுகள் பெறப்பட்டுள்ளன. (மருத்துவர் யே.எம்.எஃப் பிராங்க் என்பவரின் முனைவர் பட்ட ஆய்வறிக்கை) மேலும், மண்ணீரலில் பழமையான இரத்தம் உற்பத்தி செய்யும் முன்னோடி மரபணு செல்கள் உள்ளன. மனிதர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மண்ணீரல் மாற்று அறுவை சிகிச்சைகளில் கலப்பு முடிவுகளே கிடைத்துள்ளன. [1][2]

மண்ணீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பின்னர் முற்றிலுமாக மண்ணிரல் நீக்கப்பட்ட பின்பும் அல்லது நிரந்தரமாக செயலிழக்கச் செய்யப்பட்ட பிறகும் கூட வாழ்வதற்கு சாத்தியமுள்ள சில மண்ணீரல் திசுக்கள் அவற்றின் செயல்பாட்டை பாதுகாக்க முனைந்து தானாகவே மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுகின்றன. வழக்கமாக இச்செயல்முறை மண்ணீரலுக்கான பாரங்கைமாவின் பகுதிகள் உள்வயிற்றுக் கொழுப்பறைகளில் விட்டுச் செல்லப்படுவதை உள்ளடக்கும். இதில் ஆபத்து அல்லது சிக்கல் இல்லாமல் இல்லை. மண்ணீரல் மாற்று சிகிச்சையின் நன்மை தீமைகள் உணர்த்தப்பட்ட பிறகே இச்சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அதிர்ச்சி அல்லது அறுவைச் சிகிச்சையில் மண்ணீரல் பாதிக்கப்பட்டு சிதைந்த பின்னர் மண்ணீரல் திசுவை உடலின் வேறு பகுதியில் குறிப்பாக அடி வயிற்றில் உட்பொருத்துதலும் மண்ணீரல் மாற்றறுவை சிகிச்சையாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Wu (January 2011). "Graft-versus-host disease after intestinal and multivisceral transplantation.". Transplantation 91 (2): 219–224. doi:10.1097/tp.0b013e3181ff86ec. பப்மெட்:21076376. 
  2. Deierhoi (April 1986). "Lethal graft-versus-host disease in a recipient of a pancreas-spleen transplant.". Transplantation 41 (4): 544–546. doi:10.1097/00007890-198604000-00028. பப்மெட்:3515658.