மதின் சாகிப்

இந்தியாவின் சம்மு காசுமீரிலுள்ள பள்ளிவாசல்

மதின் சாகிப் (Madin Sahib) என்பது இந்திய நிர்வாக காசுமீரில் இருக்கும் சிறிநகரின் நவ்சோகர் அருகே அமைந்துள்ள ஒரு பழைய பள்ளிவாசல் ஆகும். மதீன் சகாப் அல்லது மதின் சாப் என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. பாக்-இ-அலி மர்தான் கான் மற்றும் சாசு கர் புவர் போன்றவை இதற்கு அருகிலுள்ள மற்ற சுற்றுப்புறப் பகுதிகளாகும்.

மதன் சாகிப் பள்ளிவாசல் 1448 ஆம் ஆண்டு சுல்தான் சைன்-உல்-அபிதீன் (புத்சா) என்பவரால் கட்டப்பட்டது. அவர் தனது ஆசிரியர் சையத் முகமது மதானியின் பெயரை பள்ளிவாசலின் பெயராக்கினார். இறப்புக்குப் பின்னர் முகமது மதானி பள்ளிவாசலின் இடதுபுறத்தில் புதைக்கப்பட்டார். [1] சையத் முகமது மதானி காசுமீரிகளுக்கு மதீன் சாகிப் என்ற பள்ளிவாசலானார்.

சையத் மதானி 1398 ஆம் ஆண்டில் தைமூருடன் மதீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்தார். சுல்தான் சிக்கந்தருக்கு தைமூர் பேரரசின் தூதராக இவர் காசுமீருக்கு அனுப்பப்பட்டார். மதீன் சாகிப் காசுமீரை மிகவும் விரும்பினார். அங்கு தங்கவும் முடிவு செய்தார். [2]

முகமது அமதானியின் சீடரான பின்னர் தொடக்கத்தில் சையத் மதானி ரெய்னாவரியில் தங்கினார்.  பின்னர்  பாட்சாவின் தலைநகரான நவ்சாகருக்கு அருகில் சென்றார். புத்சா அவருக்காக இங்கு காங்கா எனப்படும் பள்ளிவாசலைக் கட்டினார்.  1445 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 அன்று மதானி இறந்தார்.  குவாசா பகா-உத்-தின் இறப்புச் சடங்கான இறுதி பிரார்த்தனைக்கு தலைமை தாங்கினார்.

மதீன் சாகிப்பின் கூரையிலுள்ள ஓடு வேலைப்பாடு இந்த கலையின் தனித்துவமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் இக்கலை வடிவம் காசுமீர் அல்லது இந்திய துணைக் கண்டத்தில் வேறு எங்கும் காணப்படவில்லை. [3] [4]

படக்காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Mohammad Ishaq Khan(2011). Sufis Of Kashmir, p. 313. Gulshan Books, Srinagar, Kashmir. ISBN 978-81-8339-095-8.
  2. Baba Dawood Mishkati. Asrar-ul-Abrar, p.39.
  3. Mulla Ahmed Sabur. Khwarik-us-Salikeen f. 9a
  4. Khwaja Muhammad Azam Diddamari, Waqiat-i-Kashmir p. 95-96

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதின்_சாகிப்&oldid=3775140" இலிருந்து மீள்விக்கப்பட்டது