மதுர்கதி
மதுர்கதி (Madurkathi) அல்லது மதுர் , மதுர் கோட்டிர் அல்லது மதுர்கதி என்றழைக்கப்படும் இது ஒருவகை பாய் ஆகும். மதுர்கதி எனும் நாணலில் இருந்து தயாரிக்கும் பாய்கள் நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இது மேற்கு வங்காளத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தை மையமாகக் கொண்டது. மேலும் அப்பகுதியிலுள்ள கிராமப்புற பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. பாய்கள் முக்கியமாக மகிசிய சாதியைச் சேர்ந்த நெசவாளர்களாலும், முக்கியமாக பெண்களாலும் நெய்யப்படுகின்றன. இந்தக் குடிசைத் தொழில் கிராமத்தின் குடும்ப வருமானத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது.[1] [2]
மதுர்கதி Madurkathi | |
---|---|
வேறு பெயர்கள் | মাদুরকাঠি |
குறிப்பு | கைவினைப்பொருட்கள் |
வகை | கைவினைப்பொருட்கள் |
இடம் | மேற்கு வங்காளம் |
நாடு | இந்தியா |
பதிவுசெய்யப்பட்டது | 28 மார்ச் 2018 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | ipindiaservices.gov.in |
வங்காள மொழியில் மதுர் என்ற சொல் தரை பாய்களுக்கு ஒரு பொதுவான சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் இது ஒரு குறிப்பிட்ட வகை நாணலில் இருந்து நெய்யப்பட்ட பாய்களைக் குறிக்கிறது.[3] கிராமப்புற வங்காளத்தின் சமூக கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக பாய்கள் உள்ளன. மேலும் மதுர்கதி பாய்கள் படுக்கவும், உட்காரவும் பயன்படுத்தப்படுகின்றன. பாய்கள் வெப்பம் கடத்தாதவை மற்றும் வியர்வையை உறிஞ்சும். அவை மேற்கு வங்காளத்தின் சூடான மற்றும் ஈரப்பதமான காலநிலைக்கு அத்தியாவசிய வீட்டு பொருளாக அமைகின்றன. இந்த பாய்கள் மத நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.[1]
வரலாறு
தொகுஇந்தியாவில் பாய்-நெசவு சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தையது.[4] அதர்வண வேதம், சதபத பிராமணம் மற்றும் மகாபாரதம் உள்ளிட்ட பண்டைய இலக்கியங்களில் இதைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன.[1] அதன் வரலாற்று முக்கியத்துவம் இந்திய நாட்டுப்புறக் கதைகளிலும் பிரதிபலிக்கிறது. அதில் புனிதர்களுக்கு புல் பாய்கள் வழங்கப்படும் கதைகள் சொல்லப்படுகின்றன.
இடைக்கால காலத்தின் பதிவுகள் வங்காளப் பகுதியில் சாதாரண மற்றும் சிறந்த தரமான பாய்கள் தயாரிக்கப்பட்ட பாய்கள் நெசவு பற்றிய முதல் தகவல்களை வழங்குகின்றன.
அங்கீகாரம்
தொகுமார்ச் 28,2018 அன்று,புவியியல் சார்ந்த குறியீடு வழங்கப்பட்டது..[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Jana, Kalyan; Puste, Am (April 2014). "Madur Kathi – An Important Economic Non-food Crop of West Bengal". Asian Agri-History 18 (2): 145–151. https://www.researchgate.net/publication/279485980.
- ↑ "Madurkathi". Biswa Bangla (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-11.
- ↑ Naturally Bengal. "Madur, Bengal's Best Traditional Mats". www.naturallybengal.com. Naturally Bengal, India. பார்க்கப்பட்ட நாள் 26 May 2019.
- ↑ "MADUR KATHI : MAT WEAVING, DATES BACK TO THE INDUS VALLEY". www.wbkvib.org.in. பார்க்கப்பட்ட நாள் 2018-12-11.
- ↑ "India: Madurkathi of West Bengal Gets a Geographical Indication (GI) Tag | Lexology". www.lexology.com (in ஆங்கிலம்). 24 April 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-12-11.