மத்தறை பேரரசு

மத்தறை மரபு (The Mathara (IAST: Māṭhara) என்பது கிழக்கு இந்தியாவில் கலிங்க நாட்டை கி.பி. 4 ஆவது மற்றும் 5 வது நூற்றாண்டில் ஆண்ட ஒரு அரச மரபாகும். இந்த நாடு தற்கால ஒடிசாவின் கஞ்சாம் மாவட்டம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சிறீகாகுளம் மாவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியப் பகுதிகளைக் கொண்டது. இவர்களை கவிழ்த்துவிட்டு பிதர்பாக்தா மரபினர் ஆட்சிக்கு வந்திருக்கவேண்டும் எனக் கருதப்படுகிறது.

மத்தறை பேரரசு is located in ஆந்திரப் பிரதேசம்
மத்தறை பேரரசு
மத்தறை பேரரசு
மத்தறை பேரரசு
மத்தறை செப்பேடுகள் கிடைத்த இடங்கள் (வரைபடம் ஆந்திரப் பிரதேசம்)

மரபு தொகு

மாத்தறை மரபில் பின்வருபவர்கள் அறியப்படுகிறனர் (அடைப்புக்குறிக்குள் IAST ):[1]

  • சங்கர-வர்மன் (Śankaravarman)
  • சக்தி-வர்மன் (Śaktivarman)
  • பிரபாஞ்சன-வர்மன் (Prabhañjanavarman)
  • அனந்த-சக்தி-வர்மன் (Anantaśaktivarman)

மாத்தறை அரசர்கள் நாராயணனின் பக்தர்களாக இருந்தனர். (விஷ்ணு).[2]

வரலாறு தொகு

மாத்தறை வம்சத்தினர் கலிங்கத்தை 4 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து 5 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை ஆண்டனர். ஒருவேளை குப்தப் பேரரசின் சமுத்திரகுப்தரின் படைகள் பிராந்தியத்தில் இருந்து விலகிய பின்னர்.[3] இவர்கள் கலிங்க நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்க வேண்டும்.[4]

சக்திவர்மன் தொகு

சக்திவர்மனே இந்த மரபின் பழமையான ஆட்சியாளனாகத் தெரிகிறார், இவர் கலிங்காதிபதி என்ற பட்டம் பூண்டிருந்தார்.[5] இவரின் தந்தை சங்கரவர்மன் எந்த பட்டத்தையும் பூண்டதாக தெரிவ்வில்லை.[6]

சக்திவர்மனின் 13 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட ஒரு செப்பேட்டில் இவரை மகாராஜேஸ்ய-ஸ்ரீ சக்திவர்மா என குறிப்பிடுகிறது. இது இவரது அமைச்சரான அர்ஜுணதாதா என்பவரால் எழுதப்பட்டது. இது பிஸ்ஹடபுரத்தில் வெளியிடப்பட்டது, இது தற்கால பித்தபுரம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.[7] இந்த ஆவணம் அந்தணர்களுக்கு ராகலுவா பகுதியில் (நவீன ரகோலு சிறீகாகுளம் மாவட்டத்தில் உள்ளது) மாணியம் அளித்தது தொடர்பானது ஆகும்.[5]

இந்த செப்பேடு சக்திவர்மன் வசிஷ்தியின் மகன் என குறிப்பிடுகிறது.[7] வரலாற்றாசிரியர் சினிகதா திரிபாதி சக்திவர்மனின் தாயார் வசிஷ்தியின் மரபில் இருந்து வந்ததவர் என்று கூறுகிறார். இத்தகைய தாய்வழிப் பெயர்களை இவர்களுக்கு முந்தைய மரபினரான சாதவகனர்கள் மற்றும் இச்சுவாகு மரபினர் பயன்படுத்தியுள்ளனர். பிஸ்ஹதபுரா முதலில் வசிஷ்தா வம்சத்தின் கட்டுப்பாட்டின் இருந்துள்ளது, ஒருவேளை சக்திவர்மன் அவரது தாயாரின் மரபுரிமையினால் அதை அடைந்திருக்கலாம். சில அறிஞர்கள் மத்தறை மரபினரின் தலைநகராக பிஸ்ஹடபுரா இருந்தது என கருதுகின்றனர்.[5]

இந்த சாசனம் சக்திவர்மனின் கலிங்க நாடு தெற்கில் கோதாவரி ஆறுவரை பரவி இருந்ததாக கூறுகிறது.[5] இவரது மகனின் சிம்ம்புர செப்பேடு சக்திவர்மனின் ஆட்சிப்பரப்பு மகாந்தி மற்றும் கிருஷ்ணவெண்ணா (கிருஷ்ணா) ஆறுகளுக்கு இடைப்பட்டப் பகுதியில் இருந்ததாக புகழ்கிறது. இக்கூற்று ஒரு மிகைப்படுத்தலாக தெரிகிறது: 5வது மற்றும் 6வது நூற்றாண்டுகளில், கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதி சாலங்காயனார் கட்டுப்பாட்டில் இருந்தது பிறகு விஷ்ணு குந்தினர்ரும் கட்டுப்பாட்டை செலுத்தினர், மத்தறை மரபினர் வடக்கில் மகாநதி ஆறுவரையான பகுதியை ஆட்சி செய்ததற்கு சான்றுகள் இல்லை. செப்பேட்டில் குறிக்கப்பட்ட "மகாநதி" வேறு ஒரு ஆறாகும் இது தற்கால கஞ்சம் மாவட்டத்தில்; பாயும் ருசிகுல்ய ஆற்றுடன் அஸ்காவுக்கு அருகில் இணைகிறது.[8]

பிரபாஞ்சனவர்மன் தொகு

பிரபாஞ்சனவர்மன் தனது தந்தை சக்திவர்ம்மனுக்குப் பின் பட்டத்துக்கு வந்தார்.[8] இவர் வெளியிட்ட சாசணங்களில் சிங்கபுரத்தில் வெளியிட்ட சாசணம் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. இது தற்றால சிங்கபுரம் சிறீகாகுளம் மாவட்டத்தில் உள்ளது. இந்த செப்பைடு இவரை சகல-கலிங்காதிபதி ("முழு கலிங்கத்துக்கும் அதிபதி") என அறிவிக்கிறது.[5]

இச்செபெபேடு நிங்கோந்தி அக்ரகாரத்தை (பிராமணர் கிராமம்) உருவாக்கியது குறித்தது. இந்த கிராமம் கடற்கரையில் அமைந்திருந்தது, அதன் சரியான இடம் அறிய இயலவில்லை. இந்தச் செப்பேட்டில் மன்னரின் அலுவலராக (தண்டநாயகர்) ஜெயஸ்தா என்பவரின் பெயரைக் குறிப்பிடுகிறது.[8]

அனந்தசக்திவர்மன் தொகு

அனந்தசக்திவர்மன் தனது தந்தை பிரபாஞ்சனவர்மனுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர். இவர் கலிங்காதிபதி என்ற பட்டம் பூண்டிருந்தார்.[2]

இவரது 14 ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்த ஒரு சாசணம் கிடைத்துள்ளது. இது எங்கு வெளியிடப்பட்டது என்று தெரியவில்லை, இந்த சாசணம் அந்தணர்களுக்கு அந்தோரிபா என்ற கிராமத்தை மானியமாக (ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அளித்தது தொடர்பான ஆணையாகும். இதில் மன்னரின் அலுவலரான மாதர்வா என்னும் தண்டநாயகனின் பெயர் இடம்பெற்றுள்ளது.[2]

இவரின் இன்னொரு செப்பேடு சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது இது இவரின் 28வது ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டது. இதில் அரசு அதிகாரியான தேசக்சபடலதீக்‌ஷிதா என்னும் பதவில் இருந்த அர்ஜுணதாதா என்பவரின் பெயர் இடம்பெற்றுள்ளது.[2]

அனந்தசக்திவர்மனை பித்ருபக்த மன்னனான உமாவர்மன் ஆட்சியில் இருந்து அகற்றியதாக தெரியவருகிறது.[9] இவரது அரசு அதிகாரியான மாதர்வா பிறகு உமாவரம்னிடம் தேசக்சபடலதீக்‌ஷிதா என்ற பதவியை சிம்ம்புரத்தில் தொடர்ந்த்து வகித்துள்ளார்.[10] அனந்தசக்திவர்மனுக்கு பிறகான காலகட்டத்தில் பிஸ்தபுரம் வசிஷ்த்த மரபினரின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. வசிஷ்த்த மரபின் மன்னர் வெளியிட்ட சாசணம் நகரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.[6]

சாசணங்கள் தொகு

பின்வரு்ம் செப்பேடுகள் மத்தறை மரபினரால் வெளியிடப்பட்டவை:[11]

கண்டறிப்பட்ட இடம் வெளியிட்டவர் வெளியிடபட்ட இடம் ஆட்சி ஆண்டு காரணம்
ராகோலு சக்திவர்மன் பிஸ்தபுரம் 13 ராகவலு கிராமத்தில் அளித்த மாணியம் (தற்கால ரகோலு)
தெரியவில்லே பிரபாஞ்சனேயவர்மன் சிம்ம்மபுரம் (தற்கால சிங்குபுரம்) நிங்கோண்டியில் நிலக் கொடை
அனந்தவரம் அனந்தசக்திவர்மன் 14 அந்தோரிபா கிராமத்தில் அளித்த மாணியம் (தற்கால அந்தவரம்)
தெரியவில்லை (தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் உ்ளது. ) அனந்தசக்திவர்மன் 28 சகுனகா கிராமத்தில் அளித்த மாணியம் (தற்போது அடையாளம் காணப்படவில்லை)

இந்த அனைத்து சாசணங்களும் சமசுகிருத மொழியில், தென்னக பிராமி எழுத்துமுறையில் எழுதப்பட்டவை. [12]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்தறை_பேரரசு&oldid=2441776" இலிருந்து மீள்விக்கப்பட்டது