மத்திய பொஹிமியா
மத்திய பொஹிமியா என்பது செக் குடியரசு நாட்டின் நிர்வாக பிரிவுகளில் ஒன்றாகும். இப்பிரிவு வரலாற்று சிறப்பும் புகழும்பெற்ற பொஹிமியா பகுதியின் மத்தியப் பகுதியை உள்ளடக்கியதாகும். இப்பகுதியின் தலைநகரம் செக் குடியரசின் தலைநகரமான பிராகா, எனினும் அந்நகரம் மத்திய பொஹிமியா பகுதியின் கீழ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பொஹெமியா பரப்பளவின் அடிப்படையில் செக் குடியரசின் மிகப் பெரிய பகுதியாகும்.[1] இது 11,014 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது, நாட்டின் மொத்த பரப்பளவில் கிட்டத்தட்ட 14% உள்ளடக்கியுள்ளது.
நிர்வாக பிரிவுகள்
தொகுமத்திய பொஹிமியா பிராந்தியம் 12 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:
- பெனிசோவ்
- பெரோன்
- கிளாட்னோ
- கோளின்
- குட்னா ஹோரா
- மேல்னிக்
- மிலாடா போல்ஸ்லாவ்
- நைம்பர்க்
- பிராகா-மேற்கு
- பிராகா-வடக்கு
- பிரிபிராம்
- ராகோவ்நிக்[2]