மத்திய விளையாட்டரங்கம் (திருவனந்தபுரம்)

கேரளத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள விளையாட்டரங்கம்

மத்திய விளையாட்டரங்கம் (Central Stadium), என்பது இந்தியாவின், கேரளத்தின், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பல்நோக்கு விளையாட்டு அரங்கமாகும்.[1] இது முதன்மையாக தடகள விளையாட்டு, கால்பந்து விளையாட்டு போன்ற விளையாட்டுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. கேரளத்தில் சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பிற அரசாங்க செயல்பாடுகள் இந்த அரங்கத்தில் நடத்தப்படுகிறது. இந்த அரங்கம் 2017 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் திருநங்கைகளின் தடகள சந்திப்பை நடத்தியது. திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் ஓணம் திருவிழாவின் முக்கிய இடமாக இந்த அரங்கம் திகழ்கிறது.

மத்திய விளையாட்டரங்கம்
Central Stadium
முழு பெயர் Central Stadium
இடம் இந்தியா, கேரளம், திருவனந்தபுரம்
திறவு
உரிமையாளர் கேரள மாநில விளையாட்டு கவுன்சில்
குத்தகை அணி(கள்)
அமரக்கூடிய பேர் 15,000
சென்ட்ரல் ஸ்டேடியத்தில் கூடைப்பந்து மைதானம்

குறிப்புகள் தொகு

  1. "Kerala State Sports Council Facilities". Kerala State Sports Council. GOK. Archived from the original on 7 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 4 November 2017.

வெளி இணைப்புகள் தொகு