மனம் விரும்புதே உன்னை
மனம் விரும்புதே உன்னை (Manam Virumbuthe Unnai) என்பது 1999 ஆண்டைய தமிழ் காதல் நாடகத் திரைப்பபடாகும். எம். சிவசந்திரன் இயக்கிய. இப்படத்தில் பிரபு, மீனா, கரண், ராஜீவ் கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ். எஸ். கே சங்கரலிங்கம் தயாரித்த இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். படமானது 1999 திசம்பர் 17 அன்று வெளியிடப்பட்டது.[1]
மனம் விரும்புதே உன்னை | |
---|---|
DVD cover | |
இயக்கம் | எம். சிவசந்திரன் |
தயாரிப்பு | எஸ். எஸ். கே. சங்கரலிங்கம் |
கதை | எம். சிவசந்திரன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | இளவரசு |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | எஸ்.எஸ்.கே. புரோடக்சன்ஸ் |
வெளியீடு | திசம்பர் 17, 1999 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுமனைவியை இழந்த சண்முகம் ( பிரபு ) கவிதா ( பி. ஸ்வேதா ), அனிதா (பேபி அஸ்வினி) என்ற இரண்டு மகளுக்கு தந்தையாக உள்ளனர். உண்மையில், அக்குழந்தைகளின் தந்தை சண்முகம் அல்ல அந்த அனாதைக் குழந்தைகளை அவர்கள் அனாதை என்று அறியாதபடி அவர்களை வளர்த்துவருகிறார். கவிதாவும் அனிதாவும் தங்கள் தாய் அமுதாவின் ஒளிப்படத்தைக் காட்டும்படி அவரை வற்புறுத்துகின்றனர். அவர் தன் கற்பனையில் உள்ள பெண்ணை தனது நண்பர் சபாபதிக்கு ( தாமு ) விவரிக்கிறார். அதன்படி சபாபதி அந்த உருவத்தை வரைகிறான். சண்முகம் அவர்களுக்கு அந்தப் படத்தைக் காட்டுகிறார். தற்செயலாக, குழந்தைகள் உருவப்படத்தில் இருக்கும் பெண்ணின் உருவத்தை ஒத்த பிரியாவை ( மீனா ) பார்க்கிறார்கள். சண்முகம், கவிதா மற்றும் அனிதா ஆகியோர் நகரத்தில் உள்ள அவளது வீட்டிற்குச் செல்கிறார்கள்.
பிரியாவின் குடும்பம் ஒரு பெரிய, பணக்கார குடும்பம். பிரகாஷ் ( ராஜீவ் கிருஷ்ணா ) பிரியாவை ரகசியமாக நேசிக்கிறார். சந்துரு பிரகாசுக்கு ஆதரவாக உள்ளார். நகரில், சண்முகம் தனது அறிமுகமான காசியை ( எஸ். எஸ். சந்திரன் ) சந்திக்கிறார் அவர்களை பிரியாவின் வீட்டிற்கு காசி அழைத்து வருகிறார். அவர்கள் அங்கேயே தங்க முடிவு செய்கிறார்கள். பின்னர், சந்துரு அவரது சாமான்களில் பிரியாவின் படத்தைக் கண்டுபிடிக்கிறார். பின்னர், சந்துருவும் பிரியாவும் சண்முகத்தை கிண்டல் செய்யத் தொடங்குகிறார்கள். சண்முகம் பிரியாவை நேசிக்கிறார், ஆனால் பிரகாஷ் அவளை காதலிக்கிறார் என்பதை அறிந்த பிறகு, அவர் தனது காதலை கைவிடுகிறார். தான் சண்முகதின் இரண்டு குழந்தைகளின் தாய் என்று பிரியா சொல்வதை பிரகாஷ் கேட்கிறான். இதனால் தங்கள் திருமணத்தின்போது சண்முகத்தை கொல்ல பிரகாஷ் தனது அடியாட்களை ஏவுகிறார். ஆனால் அவர்கள் சண்முகத்தை எதுவும் செய்ய முடிவதில்லை. திருமணத்தை நிறுத்திய பிரியாஷ் பிரியாவை அவமதிக்கிறார். பிரியா அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறாள். இறுதியில், சண்முகம் பிரியாவும் ஒன்று சேர்கின்றனர்.
நடிகர்கள்
தொகு- சண்முகமாக பிரபு
- பிரியாவாக மீனா
- சந்துருவாக கரண்
- பிரகாசாக இராஜீவ் கிருஷ்ணா
- பிரியாவின் தந்தையாக ஜெய்கணேஷ்
- பிரியாவின் தாய் சாரதாவாக லட்சுமி
- டெல்லி கணேஷ்
- ரமேசாக தேவன்
- காசியாக எஸ். எஸ். சந்திரன்
- சபாபதியாக தாமு
- கவிதாவாக பி. ஸ்வேதா
- அனிதாவாக பேபி அஸ்வினி
- லதாவாக லதா
இசை
தொகுபடத்தின்றாக இசையை இளையராஜா மேற்கொள்ள, ஃபைவ் ஸ்டார் ஆடியோ பாடல்களை வெளியிட்டது.[2][3] பாடல்கள் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றன.[4]{
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "இளவேனிற்கால பஞ்சமி" | ஹரிஹரன், பவதாரிணி | 4:54 | |||||||
2. | "குட்டிக் குயிலை" | ஹரிஹரன் | 5:14 | |||||||
3. | "மனச கிள்ளி" | ஸ்ரீநிவாஸ், எஸ். என். சுரேந்தர், சுவர்ணலதா | 5:44 | |||||||
4. | "பூமாலை பொண்ணுக்கொரு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:53 | |||||||
5. | "வானத்தில் ஆடும்" | சித்ரா | 2:11 | |||||||
6. | "ஏதோ ஏதோ" | ஹரிஹரன், சுஜாதா மோகன் | 4:57 | |||||||
7. | "வானத்தில் ஆடும் (மறுபடியும்)" | மனோ | 2:10 | |||||||
மொத்த நீளம்: |
30:03 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jointscene : Tamil Movie Manam Virumbuthe Unnai". jointscene.com. Archived from the original on 31 January 2010. பார்க்கப்பட்ட நாள் 7 June 2019.
- ↑ "Manam Virumbuthey Unnai Tamil Film Audio Cassette by Ilayaraaja". Mossymart. Archived from the original on 15 August 2023. பார்க்கப்பட்ட நாள் 15 August 2023.
- ↑ "Manam Virumbuthe Unnai (1998)". Raaga.com. Archived from the original on 7 June 2019. பார்க்கப்பட்ட நாள் 7 June 2019.
- ↑ "Manam Virumbudhe Unnai: Music Review". indolink.com. Archived from the original on 30 June 2009. பார்க்கப்பட்ட நாள் 7 June 2019.