மனாங் மாவட்டம்

மனாங் மாவட்டம் (Manang District) (நேபாளி: मनाङ जिल्लाகேட்க, தெற்காசியாவின் நேபாளத்தின், மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 4-இல் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான சாமே ஒரு நகராட்சி மன்றமும் ஆகும்.

நேபாளத்தில் மனாங் மாவட்டத்தின் அமைவிடம்
மனாங் மாவட்டத்தில் அன்னபூர்ணா மலை

கண்டகி மண்டலத்தின் மனாங் மாவட்டம் 2,246 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 6,538 ஆக உள்ளது.[1] உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு வணிகத்தில் மனாங் மக்கள் தேர்ச்சி பெற்றவர்கள்.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம் தொகு

 
5,416 மீட்டர் உயரத்தில் தொராங் லா கணவாய்

இமயமலையில் 5,415 மீட்டர் உயரத்தில் அமைந்த தொரங் லா மலைக் கணவாய், மனாங் நகரத்தையும், மஸ்டாங் மாவட்டத்தின் முக்திநாத்தையும் இணைக்கிறது. மனாங் மாவட்டம், நேபாளத்தில் மழைப் பொழிவு மிகவும் குறைந்த மாவட்டமாகும். மனாங் சமவெளி நேபாள-திபெத் எல்லையின் அருகில் உள்ளது. இங்கு மூன்று மலைத் தடங்கள் உள்ளது. முதல் வழித்தடம் முக்திநாத், மஸ்டாங் வழியாக லாசாவை இணைக்கிறது. இவ்வழியாக பயணிப்பதற்கு நான்கு நாட்கள் ஆகும். இரண்டாவதாக, நௌர் கோலா மற்றும் நௌர்கோன் வழியாக லாசாவை அடைய ஐந்து நாட்கள் ஆகும். மூன்றாவதான மத்திய நேபாளத்தின் லர்க்கியா பஜாரிலிருந்து லாசாவிற்குச் செல்லும் மலைப் பாதையை மக்கள் பெரிதும் பயன்படுத்துகிறார்கள். மனாங் – முக்திநாத் இருப்புப் பாதை, நூற்றாண்டுகளாக பயன்பாடடில் உள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம் தொகு

இம்மாவட்டம், இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் முதல் 5,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஐந்து நிலைகளில் காணப்படுகிறது. [2]

உள்ளாட்சி நிர்வாகம் தொகு

 
மனாங் மாவட்ட உள்ளாட்சி மன்றங்கள்

மனாங் மாவட்டம், நூற்றிபதினேழு தொகுதி உறுப்பினர்களுடன் கூடிய பதின்மூன்று கிராம வளர்ச்சி மன்றங்கள் உள்ளது. மேலும் முப்பத்தி ஐந்து மலைவாழ் மக்களுக்கான குடியிருப்புகள் உள்ளது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "National Population and Housing Census 2011 (National Report)" (PDF). Central Bureau of Statistics. Archived from the original (PDF) on 2013-04-18. பார்க்கப்பட்ட நாள் November 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013 {{citation}}: horizontal tab character in |series= at position 89 (help)

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மனாங்_மாவட்டம்&oldid=3566944" இலிருந்து மீள்விக்கப்பட்டது